சென்னை: அறநிலையத்துறையின் கீழ் பணியாற்றும் அர்ச்சர்களுக்கு  மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அத்துறையின் அமைச்சர் சேகர்பாபுவை பாராட்டினார்.
சென்னை திருவான்மியூரில், இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கால பூஜைத் திட்டத்தின் கீழ் 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர், பட்டாச்சாரியார் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், அமைச்சர் சேகர்பாபுவை வெகுவாக புகழ்ந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள  12,959 கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும். அர்ச்சகர்களுக்கு ரூ4,000 நிதி, 15 வகையான பொருட்களை இன்று  வழங்கியிருக்கிறோம்.  ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ திட்டம் செயல்படுத்தப்பட்டது. கோயில் நிலங்கள், சொத்துகள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு வருகிறது; தமிழில் வழிபாடும் தொடங்கியுள்ளது. அர்ச்சகர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 120 அறிவிப்புகளை யாருமே செய்யாத வகையில் சட்டப்பேரவையில்  அமைச்சர் சேகர்பாபு. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இப்படியாக அறநிலையத்துறையில் அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக பணியாற்றி வருகிறார்”. அறநிலையத்துறையின் பொற்காலம் வரவிருக்கிறது.
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு 24 மணி நேரமும் செயல்படுகிற அமைச்சராக  திகழ்கிறார். அவரை சேகர்பாபு என்ற அழைப்பதைவிட, செயல்பாபு என்று தான் அழைக்க வேண்டும். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்று. சட்டமன்றத்தில் ஒரு திட்டத்தை அறிவித்து ஒரு வாரம் தான் ஆகிறது. சட்டமன்றம் கூட இன்னும் நிறைவடையவில்லை. ஆனால், அதற்குள் அந்த திட்டத்தை நிறைவேற்ற காரணமாக இருப்பவர் சேகர் பாபுதான். ‘எள் என்று சொன்னால் எண்ணெயாக இருப்பார்கள்’ என்று சொல்ல கேள்வி பட்டிருக்கிறோம். சேகர்பாபுவை பொறுத்தவரை, ‘எள்’ என்று கூட சொல்ல தேவையில்லை. அதற்கு முன்பே எண்ணெயாக மாறக்கூடியவர்.   அனைத்து துறைகளையும் முந்திக் கொண்டு சேகர்பாபு செயல்பட்டு வருகிறார்.

திருக்கோவில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது.கோவில் பணியாளர்கள்,அர்ச்சகர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டி தரப்பட உள்ளது. இந்த பணிகள் முடிக்கப்பட்டால் அறநிலையத்துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப் போகும் காட்சியை நாம் காணப் போகிறோம். அந்த வகையில்,ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் 12,950 கோயில்களை சார்ந்த அர்ச்சகர்கள்,பட்டாச்சாரியர்கள்,பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை நான் தொடங்கி வைக்கிறேன்.இதனால்,அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.13 கோடி செலவாகும்.மன்னிக்கவும் இதனை செலவு என்று சொல்வதற்கு பதில் ஏராளமான அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் வாழ்வு பெறுகிறார்கள் என்றே கூற வேண்டும்”,

இவ்வாறு முதல்வர் கூறினார்.