டில்லி:
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறித்ததற்கு சில மணி நேரம் முன்று மேற்கு வங்க பாஜக, பழைய 1000 ரூபாய் நோட்டுகளாக ஒரு கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட் செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
a
கருப்பு மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இந்த நோட்டுக்களை வைத்திருப்போர் வங்கி மற்றும் அஞ்சலகங்களில் கொடுத்து புதிய 2000 ரூபாய் நோட்டு பெறலாம் என்று மத்தி அரசு தெரிவித்தது.
திடீரென வெளியான இந்த அறிவிப்பால் மக்கள் திண்டாடிடனர். அத்தியாவசிய தேவைகளான பால், காய்கறிகூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.  வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டாலும் கூட்டம் முண்டியடித்தது.  பல வங்கிகளில் போதுமான புதிய நோட்டு மற்றும் சில்லறை பணம் இல்லாததாலும் மக்கள் அவதியுற்றனர்.
இன்றுவரை அதே பதட்ட நிலை தொடர்கிறது.
இதற்கிடையே, பாஜக அரசின் “செல்லாது” அறிவிப்பு, அக் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்ததாக புகார் எழுந்தது. டில்லி முதல்வர் கெஜ்ரிவாலும் இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார்.
இந்த நிலையில்,மோடியின் “செல்லாது” அறிவிப்புக்கு சிலமணி நேரம் முன்பு, மேற்கு வங்க பாஜக ,  பழைய 1000 ரூபாய் நோட்டுக்களாக ஒரு கோடி ரூபாயை வங்கியில் செலுத்தியதாக  சி.பி.ஐ. (எம்) கட்சி புகார் தெரிவித்துள்ளது.
இதையடுத்து மத்திய அரசின் “செல்லாது” அறிவிப்புக்கு முன்பே அத்தகவல் அக்கட்சியினருக்கு தெரிந்திருக்குமோ என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.
முன்னதாக, பா.ஜ.க., கட்சி ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, பழைய நோட்டை வங்கிகளில் டெபாசிட் செய்ததாக சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டிருந்தனர். அது ஆதாரமில்லாத தகவல் என்றும் தெரிய வந்துள்ளது.