ஜி5ல் ஆர்.ஆர்.ஆர்.!

Must read

ஜி5ல் ஆர்.ஆர்.ஆர்.!
இந்த வருடத்தில் இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஆர் ஆர் ஆர் ’ திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியானது.
இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில், ஜூனியர் என் டி ஆர் , ராம்சரண் மற்றும் ஆலியா பட் முக்கிய வேடத்தில் நடிக்க, பிரமாண்டமாக உருவான இந்த திரைப்படம், மார்ச் 25, 2022 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகி, இந்திய திரைத்துறையில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தங்களது ஓ.டி.டி. தளத்தில் மே 20, 2022 அன்று ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் பிரத்யேகமாக ஒளிபரப்பாகுமென ஜீ5 அறிவித்துள்ளது.
மேலும், “4கே தரத்திலும், டால்பி அட்மாஸ் தரத்திலும் வீட்டிலிருந்தபடியே வீட்டுத் திரைகளிலும், மொபைல் போனிலும் இத்திரைப்படத்தை ரசிகர்கள் கண்டு களிக்கலாம்” என்றும் அறிவித்துள்ளது.

More articles

Latest article