வெளியானது விக்ரம் ட்ரெய்லர்

Must read

சென்னை:
விக்ரம் படத்தின் ட்ரைலர் வெளியானது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. ராஜ்கமல் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், சிம்பு, விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், விக்ரம் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ”காடுனு ஒன்னு இருந்தா” என்று கமல் பேசும் வசனத்தோடு ஆரம்பிக்கும் ட்ரெய்லர் போகப்போக ஆக்‌ஷன் காட்சிகளில் நிரம்பியிருக்கிறது.

வரும் ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

More articles

Latest article