ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் பட புது வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

Must read

கொரோனாவால் தள்ளிப்போடப்பட்ட ஆர் ஆர் ஆர் படத்தின் புது வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலிக்கு பிறகு ராஜமவுலியின் பிரம்மாண்டமான படமான ஆர் ஆர் ஆர் (ரத்தம், ரணம், ரவுத்திரம்) பொங்கல் அன்று உலகெங்கும், வெளியாக் இருந்தது.  இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல பெரிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்த  பட வெளியீடு கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.  இந்த  படம் தமிழ், தெலுங்கும் மலையாளம், இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக இருந்தது.  வெளியீடு தள்ளி வைக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.

தற்போது இண்ட படத்துக்கான புது வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரொனா அச்சுறுத்தல் குறைந்து அனைத்து திரையரங்குகளும் திறக்கப்பட்டு வருவதால் ஆர் ஆர் ஆர் திரைப்படம் வரும் மார்ச் 18 அன்று வெலியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.   மேலும் அன்று வெளியிடப்படாவிட்டால் ஏப்ரல் 28 வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article