கோவா

முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் மகன் உட்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகி உள்ளார்.

வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி கோவாவில் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.   இங்கு மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன.  ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த கோவா ஃபார்வேர்ட் கட்சி காங்கிரஸ் உடனும்  மகாராஷ்டிரவாதி கோமாந்த் கட்சி திருணாமுல் உடனும் கூட்டணி அமைத்துள்ளதால் பாஜகவுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாஜகவின் சட்டப்பேரவை தேர்தலில் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உட்பல் பாரிக்கருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளிக்கவில்லை.   அவர் கோவாவில் பனாஜி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த நிலையில் அவருக்கு வேறு இரண்டு தொகுதிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.  அதை அவர் மறுத்து விட்டார்.

இதையொட்டி  உட்பல் பார்க்கர் பாஜகவில் இருந்து விலகி உள்ளார். அவர்,

”எனக்கு  பனாஜி தொகுதி மக்களின் ஆதரவுக்கு இருப்பதை எடுத்துக் கூறி கடைசி நிமிடம் வரை போராடிப் பார்த்துவிட்டேன். ஏற்கனவே கடந்த முறைதான் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றால் இந்த முறையும் மறுத்துள்ளனர்.  ஆனால் எனக்கு  மறுத்துவிட்டு, சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகச் செயல்பட்டு வெற்றி பெற்றபின் கட்சி தாவியவருக்கு பனாஜி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே நான்  கட்சியிலிருந்து விலகியுள்ளேன். எனது அரசியல் எதிர்காலத்தை பனாஜி மக்கள் தீர்மானிப்பார்கள்”

என்று கூறி உள்ளார்.