டில்லி

வறான தகவல்களைப் பரப்பிய 35 பாகிஸ்தான் யூ டியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளது.

சமீப காலமாக சமூக வலைத் தளங்கள் மூலம் தவறான தகவல்கள் பரப்பி வருவது அதிகரித்து வருகிறது.  குறிப்பாக ஒரு சில நாடுகளில் இருந்து தங்கள் எதிரி நாடுகளைக் குறித்து தவறான தகவ்லாக்ளை யூ டியூப் சேனல்கள், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் மூலம் உண்மை போலப் பரப்பப்படுகிறது

அவ்வகையில் இந்திய அரசு மற்றும் இந்தியாவைக் குறித்துத் தொடர்ந்து தவறான கருத்துக்களை சமூக வலை த் அளங்கள் மூலம் பரப்ப்பபப்ட்டு வந்தது.   இது குறித்து தொழில்நுட்ப நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இவை பாகிஸ்தானில் இருந்து இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதையொட்டி மத்திய அரசு இந்த சமூக வலைத்தளக் கணக்குகளை முடக்கி உள்ளது.  இவ்வாறு 35 யூ டியூப் சேனல்கள், 2 டிவிட்டர் கணக்குகள், மற்றும் 2 இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.   இவை அனைத்தும் பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.