ஈரான்,சீனா, ரஷ்ய நாடுகள் இந்தியப் பெருங்கடலில் கூட்டுப் பயிற்சி

Must read

டெஹ்ரான்

ந்தியப் பெருங்கடல் பகுதியில் ஈரான், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டுப் பயிற்சி செய்து வருவது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.

இந்தியப் பெருங்கடலின் வடக்குப் பகுதியில் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.  இது கடந்த 2019 ஆம் ஆண்டில் இருந்து இந்த 3 நாட்களும் இணைந்து நடத்தும் மூன்றாம் பயிற்சி ஆகும்.   இதில் ஈரானின் 11 கப்பல்கள், ரஷ்யாவின் 3 கப்பல்கள் மற்றும் சீனாவின் 2 கப்பல்கள் பங்கேற்றுள்ளன.

இந்த பயிற்சி கடல் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொண்டதாக மூன்று நாடுகளும் விளக்கம் அளித்துள்ளன.  மேலும்  இந்த  பயிற்சியில் கடலில் இரவு நேரங்களில் எவ்வாறு சண்டை இடுவது,  மீட்புப் பணிகளில் எப்படி என்பது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.

இது குறித்து ஈரான் செய்தித் தொடர்பாளர் முஸ்தஃபா,

இப்போதைய கூட்டுப் பயிற்சியின் போது இரவு நேரங்களில் கடற்பரப்பில் உள்ள வீரர்கள் குறி பார்த்துச் சுடுதல், கடலின் நடுவே தீப்பிடித்த போர்க்கப்பலை எப்படிக் காப்பது, எதிரிகளால் சூழப்பட்ட  கப்பல் மற்றும் அதில் உள்ள வீரர்களைக் காப்பாற்றுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.   மூன்று நாடுகளும் இந்த கூட்டுப் பயிற்சியின் மூலமாக தங்களது நாட்டுக் கடல் பாதுகாப்பைப் பலப்படுத்தி உள்ளன”

எனத் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article