பாட்னா: முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் இரவு மாடிப்படியிலிருந்து தவறி விழுந்து, விபத்துக்குள்ளானார். அவருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் லாலுவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

லாலு பீகார் முதலமைச்சராக இருந்த 1991 மற்றும் 1994 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே தியோகார்க் கருவூலத்தில் இருந்து 84 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் முறைகேடாக எடுக்கப்பட்து உள்பட காவல்நடை தீவ ஊழல் என ஏராளமான வழக்குகள் அவர்மீது போடப்பட்டுள்ளன. இதில் 5க்கும் மேற்பட்ட வழக்குகளில் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், வயது முதிர்வுகளால் ஏற்படும் நோய் தொல்லையால் தற்போது ஜாமினில் வெளியே வந்து, தனதுவீட்டில் ஒய்வெடுத்து வருகிறார்.

இத்ந நிலையில், இன்று அதிகாலை  அவர் வீட்டில் இருந்த மாடிப்படிக்கட்டில் இறங்கும்போது, தவறி விழுந்து உருண்டார். இதனால், அவரது தோள்பட்டையில் பலத்த அடி  எற்பட்டது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர், அவரை  உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஐசியு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகனும்,  ராஷ்ட்ரிய ஜனதா கட்சியின் தலைவருமான  தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்பட பலவித உடல் நல பாதிப்புகளால் அவதிப்படும் லாலு பிரசாத் யாதவ் தற்போது, தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து, பாட்னாவில் உள்ள பராஸ்  மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பனாரஸ் மருத்துவமனை மருத்துவர், லாலு இன்று அதிகாலை 3.30 மணிக்கு அவரை அழைத்து வரப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.  ஐசியுவில் உள்ள அவரை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர் என்று கூறினார்