தந்தை ராஜ் கபூர் பற்றிய சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்ட ரிஷி கபூர்

Must read

இந்தித் திரையுலகில் பழம்பெரும் நடிகர் ராஜ்கபூர் , அவரது மகன் ரிஷி கபூர், ரிஷி கபூரின் மகன் ரன்பீர் கபூர் ஆகியோர் முன்னனி நட்சட்திரங்கள். அவரது மனதில் பட்டதை வெளிப்படையாக பேச ஒரு போதும் நடிகர் ரிஷி கபூர் தயங்கியதில்லை. சமீபத்தில் வெளியிடப்பட்ட “குல்லம் குல்லா: ரிஷி கபூர் அன்சென்சார்ட்” என்ற அவரது சுயசரிதையில், அவரது கள்ளங்கபடமற்ற பண்பு நிரம்பியுள்ளது. ரிஷி கபூர், தனது தந்தையும் பழம்பெரும் நடிகருமான ராஜ் கபூர் பற்றியும் அவரது மது மற்றும் முன்னணி கதாநாயகிகளோடு இருந்த தொடர்பு பற்றியும் மனம் திறந்தார்.

அவர் தனது தந்தைக்கு நர்கிஸ் தத் மற்றும் வைஜயந்தி மாலாவுடன் இருந்த கள்ளத்தொடர்பு குறித்தும், அந்த தொடர்பிற்கு அவரது தந்தை முற்றுப்புள்ளி வைக்கும் வரை, தமது தாயார் கிருஷ்ணா தன்னையும் அழைத்துக் கொண்டு வீட்டை  விட்டு வெளியேறியது குறித்தும் மனம் திறந்து பேசினார். இதுபோல் பகிரங்கமாக ரிஷி கபூர் மனம் திறந்து பேசுவது முதல் முறை அல்ல.

இதுவரை ஐந்து முறை இவ்வாறு ரிஷி கபூர் பேசியுள்ளார்: தனது முதல் ஃபிலிம்பேரை விலைகொடுத்து வாங்கியது பற்றி ரிஷி கபூர் ஒப்புக்கொண்ட போது ஒவ்வொரு ஆண்டும், நடிகர்கள் விருதுகளை விலைக்கு வாங்குவது பற்றி அரசல்புரசலாக வதந்திகள் வலம் வந்தாலும், ரிஷி கபூரைத் தவிர எந்த நடிகரும் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதில்லை.

தி க்வின்ட் என்ற நாளிதழுக்கு பேட்டியளிக்கையில் அவர்,

“எனது வேலைக்காக மட்டுமே விருது வழங்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன், வழங்கப்படும் என்றும் எனக்குத் தெரியும். தற்செயலாக, ஒருமுறை நான் ஃபிலிம்பேரை வாங்குவதில் மூர்க்கத்தனமாக இருந்தேன் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. பாபி படத்தில் என் நடிப்பிற்கான ஃபிலிம்பேர் விருதை நான் விலை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது”

என்று ஒப்புக்கொண்டார். தனது மகன் ரன்பீர் கபூருடன் சுமூகமான உறவு இல்லை என்று கூறிய போது கடந்த ஆண்டு, முன்னாள் நடிகர் சிமி கார்வல் ரிஷி மற்றும் நீது கபூரிடம் பேட்டி எடுப்பது போல் இணையத்தில் ஒரு வீடியோ வெளியானது. அதில் கேட்ட கேள்விகளுக்கு அவர் மிகவும் நேர்மையாக பதிலளித்தார். அவர்களுக்கு இடையே ஒரு கண்ணாடி சுவர் இருப்பது போலவும், அதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் பார்க்க முடியும் என்றாலும், எதையும் உணர முடியாது என்றும் அவர் கூறினார். அவரது மகனுடனான உறவைச் சரி செய்வது பற்றி கேள்விக்கு, அதற்கு மிகவும் காலம் கடந்துவிட்டதாக வருத்தத்துடன் கூறினார் ரிஷி கபூர் .

ட்விங்கிள் கன்னாவிற்கு சர்ச்சைக்குரிய பிறந்த நாள் வாழ்த்து கூறிய போது ட்விங்கிள் கன்னாவின் 41-வது பிறந்த நாளிற்கு ட்விட்டரில் ரிஷி கபூர் வாழ்த்து தெரிவித்தது, ஒரு புயலைக் கிளப்பியது.

“பிறந்த நாள் வாழ்த்துக்கள்! நான் உன் தாயுடன் பாபியில் நடித்துக் கொண்டிருந்த போது, நீ உன் தாயின் கருவில் இருந்தாய்,” என்று அவர் எழுதினார். இதைப் படித்த அனைவரும் எந்த ஆண்டில் படம் வெளியானது என்றும், எந்த ஆண்டில் ட்விங்கிள் பிறந்தார் என்றும், அப்போது அவரது தாயார் டிம்பிள் கபாடியாவிற்கு திருமணம் ஆகியிருந்ததா என்றும் கணக்கிட முயற்சி செய்து குழம்பினர்.

தனது மகன் ரன்பீரின் விளையாட்டுத்தனத்தைப் பற்றி அலட்டிக் கொள்ளாத தந்தையாக இருந்த போது தனது மகன் ரன்பீர் கபூர் தன் காதல் உறவுகளில் பெண்களை ஏமாற்றியுள்ளார் என்று ரிஷி கபூர் ஒப்புக்கொண்ட போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இது தனக்கு எப்போதும் தெரியும் என்று ரிஷி கபூர் கூறிய போது ரசிகர்கள் மேலும் அதிர்ச்சியடைந்தனர். ஃபிலிம்பேருக்கு அளித்த பேட்டியில் “தனது மகன் ரன்பீர் கபூர் வெற்றிகரமான கலைஞன். எந்த பெண்ணும் அவனுடன் வெளியே செல்ல விரும்புவர். இளம் வயதில் அனுபவிக்காமல், என் வயது வரும்போதா அனுபவிப்பான் ?

வீட்டில் நடப்பதை நான் கவனித்து வருகிறேன். இது பற்றி எனக்குத் தெரியும். என் வீட்டு ஊழியர்களுக்கும் தெரியும். நான் தான் இன்னும் வீட்டின் முதலாளி. எனவே , வீட்டில் நடைபெறும் அனைத்து செய்திகளும் என் காதுகளுக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.” என்றார் ரிஷி கபூர். ரன்பீர் மற்றும் கத்ரீனா சேர்ந்து வாழ்வது பற்றி அவர் ஒப்புக்கொண்டபோது : ரன்பீர் கபூர் மற்றும் கத்ரீனா கைஃப் உறவு ஊரறிந்த இரகசியமாகும். இந்த முன்னாள் காதல் ஜோடி ( தற்போது பிரிந்து விட்டனர்) சேர்ந்து வாழ்வதற்காக ஒன்றாக தனிவீட்டிற்கு குடிபெயர்ந்த போது, அவர்கள் ஊடகங்களுக்கு அதை அறிவிக்கவில்லை. அந்த சூழ்நிலையில், மும்பை மிரர் என்ற பத்திரிக்கைக்கு அளித்த ஒரு பேட்டியில், ரிஷி கபூர் அதை பகிரங்கப் படுத்தினார்.

“திருமணத்திற்குப் பிறகு நான் வெளியேறிய போது என் தந்தை என்னை அனுமதித்தார், வீட்டை விட்டு வெளியேறி தனது காதலியுடன் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ரன்பீர் முடிவெடுத்ததை நான் அனுமதித்தேன். இந்த வீட்டில் அவருக்கு ஒரு அறை இருந்தது, அது எப்படி ஒரு 33 வயது இளைஞனுக்கு போதுமானதாக இருக்க முடியும் ? ” என்று , ரிஷி கபூர் கூறினார்.

 

More articles

Latest article