‘ஆமா, நான் பொறுக்கிதான்’:  படத்தலைப்புதாங்க இது!

Must read

ஜி பிலிம் பேக்ட்ரி சார்பில்  ஜெய் ஆகாஷ் நடிக்கும் படத்தின் பெயரே ஜர்க் ஆக வைக்கிறது.  ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ என்பதுதான் படத்தின் பெயர்.

நாயகிகளாக அனிஷா, தீப்தி மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன், பொன்னம்பலம், சாம்ஸ், சுமன்ஷெட்டி, கயல் வின்செண்ட், மும்பை வில்லன்: ஜித்தேந்திரசிங் ஆகியோர் நடிக்கின்றனர் .

பட பூஜை

சர்வதேச அளவில் நெம்பர் 2 பிஸினஸ்கள் வில்லனுக்கு ஒரு இளம் தம்பதியால் சிக்கல் ஏற்படுகிறது. அந்த தம்பதியை தீர்த்துக் கட்ட வில்லன் எடுக்கிற முயற்சியில் மனைவி  மட்டும் இறந்துபோகிறார். அவள் சாகும் நிலையில் தன்னை இந்த நிலைக்கு ஆளானவர்களை கண்டுபிடித்து பழிவாங்கும்படி கணவனிடம் வேண்டுகோள் வைக்கிறார்.

வெகுண்டெழுந்த கணவன் அந்த வில்லனை தேடி மாநிலம் மாநிலமாக, நாடு நாடாக சென்று கண்டுபிடிக்க போகிறார்.

அப்பாவி கணவனாக இருந்து அதிரடியான ஹீரோவாகி வில்லனை பழிவாங்கும் கேரக்டரில் ஜெய் ஆகாஷ்  நடிக்கிறார். கதை சென்னையில் தொடங்கி இந்தியாவின் பல மாநிலங்களிலும் லண்டன், மலேசியா, ஹாங்காங், ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளிலும் நடக்கிறது.

தலைப்பு குறித்து கதாநாயகன் ஜெய் ஆகாஷிடம் கேட்டபோது, ‘நெகட்டிவ் வைபரேஷன் எப்போதுமே சினிமாவில் பாசிட்டிவ் ரிசல்ட் தந்திருக்கிறது. உதாரணத்திற்கு பிச்சைக்காரன், நானும் ரவுடிதான் இப்படி பல படங்களை சொல்லலாம். அதே போல இதுவும் மிக பரபரப்பான கதையாக இருக்கும்” என்றார்.

மேலும், “முதல்முறையாக 5 விதமான கெட்டப்புகளில் நடிக்கிறேன் என்றார்.

More articles

Latest article