லகாபாத்

மாயாவதியின் கட்சித் தலைவர் அலகாபாத்  பல்கலைக்கழகத்தின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்டதால் கடும் வன்முறை வெடித்துள்ளது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ராஜேஷ் யாதவ்,  கடந்த சட்டமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஆவார்  இவர் அலகாபாத் பல்கலைகழக வாசலில் அவருடைய நண்பர் முகுல் சிங் என்பவரை சந்தித்து பேச சென்றுள்ளார்.  அப்போது அங்கிருந்த சிலருடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.  அந்த கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டனர்.  வயிற்றில் குண்டு பாய்ந்த ராஜேஷ் யாதவ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதனால் அவருடைய  ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். சாலையில் சென்ற பஸ், மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்தனர்.  இரு பஸ்கள் எரிக்கப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன.  ராஜேஷ் யாதவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையும் பகுஜன் சமாஜ் கட்சியினரால் தாக்கப்பட்டுள்ளது.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.