சென்னை,

னடாவின்  புதிய ஜனாநாயக கட்சி தலைவராக (New Democratic Party) இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவரது கட்சி கனடாவின் 3வது பெரிய கட்சி ஆகும்.

கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் (என்.டி.பி) தலைவராக சீக்கியரான ஜக்மீட் சிங் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். அடுத்த பொதுத்தேர்தலில் இவர் கட்சியை வழி நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.

கனடாவின்  முன்னாள் குற்றவியல் அரசு வழக்கறிஞரான ஜக்மீட் சிங் (வயது 38) இடதுசாரி கட்சியின என்டிபி கட்சியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மூன்று பேரை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி தலைவருக்கான தேர்தலில் ஜக்மீட் சிங் 53.6 சதவிகித வாக்குகளை பெற்று தலைமை பதவியை கைப்பற்றினார்.

இதுகுறித்து பேட்டியளித்த சிங், இது எதிர்பாராத வெற்றி என்றும், இதன் காரணமாக தனக்கு பெரும் மரியாதை கிடைத்துள்ளது என்று கூறினார்.

ஏற்கனவே  2015-ம் கனடாவில் நடைபெற்ற  தேர்தலில் என்பிடி  கட்சி 59 தொகுதிகள் மட்டுமே பெற்று வலுவிலந்த நிலையில் இருந்தது.

இந்நிலையில் வர இருக்கும் தேர்தலில் இவர் கட்சியை வலுப்படுத்தி வெற்றிக்கனியை பெற கடுமையாக முயற்சி மேற்கொள்ள வேண்டிய சூழலில் சிங் வெற்றி பெற்றுள்ளார்.

தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஒருவர் செய்த இடையூறுக்கு எதிராக சிங் பேசிய வீடியோ பேச்சு தான் அவரது வெற்றிக்கு அச்சாரம் என்றும் கூறப்படுகிறது.

338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுன்றத்தில், இடதுசாரி கட்சியான புதிய ஜனநாயக கட்சிக்கு (என்பிடி) 44 உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சிய உள்ளது.

கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஆளுக்கட்சிக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளை பெற்று எதிர்க்கட்சியாக அமர்ந்தது. ஆனால் 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது பெரும் சரிவை சந்தித்து.

இந்நிலையில், அடுத்து 2019ம் ஆண்டு வர இருக்கும் தேர்தலில் சிங் கடும் சவாலை எதிர்கொண்டு வெற்றிபெறுவார் என்று நம்பப்படுகிறது.