டில்லி:

நாடு முழவதும் ரேஷன் கடைகளில் அடுத்த ஆண்டு ( 2018) வரை மட்டுமே மானிய விலையில் அரிசி கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அடுத்த ஆண்டிலிருந்து அரிசி, கோதுமை போன்ற பொருட்கள் ரேஷன் கடைகளில் மானிய விலையில் கிடைக்காது என்பது தெளிவாகிறது.

நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆண்டுக்கு 1 லட்சம் வருமானம் பெறுபவர்களுக்கு ரேஷனின் மானியம் தரப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார்  தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் சமையல் காஸ் விலை மானியம் அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்திருந்தது. அதைத்தொடர்ந்து ரேஷனில் வழங்கப்படும் மானிய விலையிலான பொருட்களும் ரத்து செய்யப்படும் என்று அதற்கான விதிகள் நேற்று வெளியிடப்பட்டு உள்ளது.

உணவு பாதுகாப்பு தொடர்பான மத்திய அரசின் விதிகளில், வீட்டில் குளிர்சாதனப் பெட்டி வைத்திருப்பவர்கள், அரசு ஓய்வூதியம் பெறுபவர்கள், ஆண்டிற்கு 1 லட்சத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள், 3 அறைகள் கொண்ட கான்கிரீட் வீடு உள்ளவர்கள், சொந்த பயன்பாட்டுக்கு கார் வைத்திருப்பவர்கள் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த விதிகளின்படி பார்த்தோமானால் 90 சதவிகித மக்கள் ரேஷன் பொருட்களை வாங்க இயலாத சூழ்நிலை உருவாகி விடும்.

இந்நிலையில், இந்த பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதேற்கு பதில்அளித்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்,

நாடு முழுவதும் 81 கோடி மக்களுக்கு முறையே கிலோ ரூ. 2 மற்றும் ரூ.3 என வழங்கப்பட்ட மானிய, அரிசி விலைகள் 2018 ஆம் ஆண்டு வரை பரிசீலனை செய்யப்படமாட்டாது.

உணவு பாதுகாப்பு சட்டப்படி 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தானியங்களின் விலை மறுபரிசீலனை செய்ய வேண்டும் . இருப்பினும் 2018 வரை தற்போதைய திட்டத்தை தொடர முடிவு செய்துள்ளோம்,” என கூறினார்.

இதன் காரணமாக நாடு முழுவதும் ரேஷன் பொருட்களை விரைவில் ரத்தாவது உறுதியானது.