டில்லியில் தமிழக விவசாயிகளுக்கு உணவு வழங்கும் சீக்கியர்கள்

டில்லி:

டில்லி ஜந்தர் மந்தரில் போராடி வரும் தமிழக விவசாயிகளுக்க உணவு வழங்குவதற்காக சீக்கிய குருத்வார நிர்வாக கமிட்டி புதிதாக சமையலறையை தொடங்கியுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுக்கு உணவு வழங்குவதற்காக டில்லியில் உள்ள சீக்கிய குருத்வாரா கமிட்டியினர் ஜந்தர் மந்தர் ப குதியில் சமையலறையை தொடங்கி விவசாயிகளுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர். இந்த கமிட்டியின் தன்னார்வலர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சமையல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தலைவர் மஞ்சித் சிங் கூறுகையில்,.‘‘ இங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மிக தொலைவில் இருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு மொழியும் தெரியாது. உணவுக்காக அவர்கள் எங்கே செல்வார்கள். இதனால் ஒரு நாளைக்கு இரண்டு வேலைகள் நாங்கள் உணவு தயாரித்து கொடுக்கிறோம். இந்த உதவியை நாங்களாக தான் செய்கிறோம். அவர்கள் எதுவும் கேட்கவில்லை’’ என்றார்.

விவசாயிகளுக்கு உணவாக சப்பாத்தி, தால் போன்றவை வழங்கப்படுகிறது. பின்னர் விவசாயிகள் அரிசி சாதம் விரும்புவார்கள் என்பதால் தற்போது அவை வழங்கப்படுகிறது.

போராட்டத்தில் கலந்துகொண்ட உசிலாண்டியன் என்பவர் கூறுகையில்,‘‘தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை இருந்தது. ஆனால் தற்போது தஞ்சை விவசாயிகள் டில்லியில் தன்னார்வலர்களிடம் உணவு வாங்கி சாப்பிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வங்கியில் எனது மனைவியின் நகைகள் அனைத்தும் அடகு வை க்கப்பட்டுள்ளது.

எங்களது சேமிப்பை வைத்து எனது குடும்பத்தில் உள்ள 4 பேரும் ஒரு வேளை உணவு சாப்பிடுகிறோம்.
எங்களது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக இங்கே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப எங்களது வயிறு நிறைந்திருக்க வேண்டும்’’ என்றார்.
English Summary
For Tamil Nadu Farmers Protesting In Delhi, Daily Langar From Gurdwara