சென்னை: மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிக்கலாம் என உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், அதை எதிர்த்து,  மீனவர்கள் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் ஜனவரி 24ந்தேதி அன்று  அதிரடி தீர்ப்பு வழங்கி யது.  அதன்படி, மீனவர்கள் சுருக்குமடி வலைகளை வாரத்தில் 2 நாட்கள் மட்டும் பயன்படுத்தலாம் என்பது உள்பட சில கட்டுப்பாடுகளையும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்து தீர்ப்பளித்துள்ளனர்.

அதன்படி,  மீனவர்கள் சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி கடலில் 12மைல் தொலைவு தூரம் சென்று மீன்கள் பிடித்துக்கொள்ளலாம்  மேலும் கடலுக்குள் காலை 8 மணிக்கு சென்று மாலை 6 மணிக்கு திரும்ப வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம்கட்டுப்பாடுகளில் தெரிவித்திருந்தது.

இந்தமீனவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை பின்பற்ற சாத்தியமில்லை. மேலும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சென்று கடலில் மீன்பிடிப்பது என்பதும் நடைமுறையில் இயலாத காரியம் என்றும் மீனவர்கள் தரப்பில் கூறினர். இதையடுட்டு கட்டுப்பாடுகளை தளர்த்தக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்துள்ளனர்.

உச்சநீதிமன்ற கட்டுப்பாடுகள்,  பின்பற்ற முடியாத நிலையில் உள்ளதால்,   உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மறு பரிசீலனை செய்யுமாறு மீனவர்கள் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மீனவர்கள் நிபந்தனைகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த அனுமதி! உச்சநீதிமன்றம் தீர்ப்பு…