சங்கரமடத்தில் இருந்து வெளியேற சங்கராச்சாரியர்களுக்கு தடை

Must read

சென்னை:

சென்னையில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் காஞ்சி இளைய சங்கராச்சாரியர் விஜேயந்திரர் கலந்து கொண்டார். இந்த விழாவில் தமிழ்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டது. அப்போது விஜேயந்திரர் எழுந்து நிற்கவில்லை. விழா முடிவில் ஒலிபரப்பான தேசிய கீதத்துக்கு அவர் எழுந்து நின்றார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

விஜேயந்திரரின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் ஆர்வலர்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த சமயத்தில் விஜேயந்திரர் தியானத்தில் இருந்தார் என்றும், தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்கும் மரபு சங்கரமடத்தில் இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது. எனினும் விஜேயந்திரருக்கு எதிராக தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மறியல் போராட்டம் உள்ளிட்டவை நடந்து வருகிறது.

இதையடுத்து காஞ்சி சங்கரமடத்தை விட்டு வெளியேற சங்கராச்சாரியர்களுக்கு காவல் துறை கட்டுபாடு விதித்துள்ளது. காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், இளைய மடாதிபதி விஜயேந்திரரும் தங்களிடம் கூறாமல் எங்கும் செல்லக்கூடாது என்று போலீஸ் உத்தரவிட்டுள்ளது.

More articles

Latest article