மூத்த தெலுங்கு நடிகை விஜயநிர்மலா ஹைதராபாதில் மாரடைப்பால் காலமானார்…!

Must read

மூத்த தெலுங்கு நடிகை விஜயநிர்மலா ஹைதராபாதில் காலமானார்.

தமிழ் தெலுங்கு ,மலையாளம் என சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயநிர்மலா .

தமிழில் பணமா பாசமா படத்தில் எலந்தப்பழம் பாடல் மூலம் பிரபலமானவர்.

44 படங்களை இயக்கியுள்ள விஜயநிர்மலா , அதிக படங்களை இயக்கிய பெண் இயக்குனராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தெலுங்கில் பிரபலமாக இருந்த நடிகர் கிருஷ்ணாவை மணந்துக் கொண்டார். இவரது மகன் நரேஷூம் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளார். உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றிரவு ஹைதராபாத் காண்டினென்ட்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயநிர்மலா மாரடைப்பால் காலமானதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு வயது 73.

More articles

Latest article