டில்லி:

ரிசர்வ் வங்கியின் கவர்னர் மற்றும் துணை கவர்னர்களுக்கான சம்பளத்தை மத்திய அரசு உயர்த்தி இருக்கிறது. .

ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருப்பவர், உர்ஜித் படேல், 2016. துணை கவர்னர்களாக இருப்ப வர்கள் ஆர்.காந்தி, எஸ்.எஸ்.முந்த்ரா, என்.எஸ்.விஸ்வநாதன், வி.ஆச்சாரியா ஆகிய நால்வர்.

கவர்னரின் மாத அடிப்படை சம்பளம், 90 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இது, 2.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

துணை கவர்னர்களின் சம்பளம், 80 ஆயிரம் ரூபாயாக இருந்தது, இது 2.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த, 2016, ஜனவரி, 1ம் தேதியில் இருந்து இந்த சம்பள உயர்வு அமலுக்கு வரும் என,மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரம், ரிசர்வ் வங்கி கவரனரைவிட தனியார் வங்கி அதிகாரிகள் அதிக சம்பளம் பெறுகிறார்கள் என்று வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.