மக்களுக்காக போராடுபவர்களை கைது செய்வது ஏன்? கட்ஜு கேள்வி

Must read

 வாஷிங்டன்,

மிழக விவசாயிகள் டில்லியில் இன்று 21வது நாளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இன்று தமிழகத்தில் கடைஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிருகிறது. மீறி போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னாள் நீதிபதி கட்ஜு தமிழக போலீசாருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு, தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட  அமெரிக்க போலீசாராரே அனுமதி அளிக்கின்றனர். இப்படி இருக்கும்போது, தமிழ்நாட்டில் போலீஸ் அனுமதி மறுப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

அமெரிக்காவில் உள்ள  ”டல்லாஸ் மெட்ரோப்ளெக்ஸ்’ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ‘கட்ஜூவுடன் ஒரு மதிய வேளை’ என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.

அதில் பங்கேற்ற உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ இந்தியாவில் நிலவும் பிரச்சனைகள் குறித்து பேசினார்.

அப்போது தமிழக விவசாயிகள் பிரச்சனைகள் குறித்தும் பேசினார். கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட சக விவசாயிகளின் மண்டை ஓட்டுகளுடன், தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகள் போராட வேண்டிய அவலம் இந்தியாவில்  ஏற்பட்டுள்ளது.

உணவுகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் நாட்டுக்குத் தேவை.  தொழிலதிபர்களோ, எஞ்ஜினியர்களோ உணவைத் தயாரிப்பதில்லை. அனைவருக்கும் தேவையான உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் குறைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு காணவேண்டும் என்றும், விவசாயிகளின் குறைகளை முழுமையாக ஆராய்ந்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் கேள்விக்கு பதில் கூறினார்.

அப்போது தமிழகத்தில் மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த கட்ஜு,  தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கூடவே கூடாது என்றார்.

இந்த ஹைட்ரோ கார்பன்  திட்டங்களுக்காக உபயோகிக்கப்படும் தொழில் நுட்பங்கள் மனித வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதன் காரணமாக,  நாட்டில்  பூகம்பம், நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசு, நோய்கள் என பல இன்னங்களுக்கு வழி வகுக்கும் என்றும்,

மக்கள் நலனுக்கு எதிரான தொழில் நுட்பங்களை, மக்கள் வசிக்கும் இடங்களில் பயன்படுத்த லாமா?  தொழில் நுட்பங்கள் மக்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கேடு விளைவிக்கக் கூடாது என்றார்.

மேலும், இங்கு (அமெரிக்கா) பல மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் தடை செய்யப்பட்டு உள்ளது. மக்கள் வசிக்காத இடங்களில்தான் இத்தகைய திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.

ஆகவே, மக்களுக்கு  கேடு விளைவிக்கக் கூடிய ஹைட்ரோ கார்பன் திட்டம் ,  மக்கள் வசிக்கும் இடங்களில் அனுமதிக்கக் கூடாது,’ என்றும் கூறினார்.

இன்னொருவர் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளிக்கையில், விவசாயிகளுக்கு ஆதரவாக போராடும்  இளைஞர்களுக்கு தடை விதித்த தமிழக போலீஸுக்கு கண்டனம் தெரிவித்தார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் படி அமைதி வழியில் போராடும் உரிமை அனைத்து குடிமக்களுக்கும் உண்டு. அதைப் பறிக்கும் அதிகாரம் காவல் துறைக்கு கிடையாது.

அமெரிக்காவில், இங்கே டல்லாஸ் நகரில் தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத் திற்கு ஆதரவாக பேரணி நடத்தி இருக்கிறார்கள். அமெரிக்க காவல்துறை அந்த பேரணிக்கு பாதுகாப்பு வழங்கி, போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நெறிப்படுத்தி உதவி செய்து உள்ளார்கள்.

ஆனால் தமிழக விவசாயிகளுக்காக போராடும் இளைஞர்களை, தமிழகத்தில், தமிழக காவல் துறையே தடை செய்கிறது. தமிழகத்தின் மீது அமெரிக்க போலீஸுக்கு இருக்கும் அக்கறை கூட இவர்களுக்கு இல்லையா? என்றும் கேள்வி எழுப்பினார்.

More articles

Latest article