Skip to content
  • Mon. Sep 21st, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழக்கு: 27-ந்தேதி தீர்ப்பு வழங்குவதாக உயர்நீதி மன்றம் அறிவிப்பு

Jul 18, 2020

சென்னை:

மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலை யில், வரும்  27-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தெரிவித்து உள்ளது.

மருத்துவ படிப்புக்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின ருக்கு (ஓபிசி)  50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி அ.தி.மு.க., தி.மு.க., திராவிடர் கழகம், ம.தி.மு.க., பா.ம.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் தமிழக அரசு, புதுச்சேரி அரசு என ஏராளமான வழக்குகள்  தனித்தனியாக சென்னை  உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.  இந்த வழக்கின் கடந்த  விசாரணையின்போது, மத்தியஅரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில்,  , ‘அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி தொரடப்பட்ட வழக்கில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டால், 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தி ருந்தது.
மேலும்,  மருத்துவ படிப்புக்களில் அந்தந்த மாநிலங்களின் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற அனுமதிக்கலாம். அதேநேரம் அந்த இடஒதுக்கீடு மொத்த இடங்களில் 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.. அப்போது தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை இருக்கும் போது மத்திய அரசு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தவறானது.
தமிழகத்தில் தான் அதிகளவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிறபடுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் சாதிவாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடை அதிகரிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே கூறியுள்ளனது.
அதனால், இடஒதுக்கீட்டில்  எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டும் இடஒதுக்கீடு வழங்கிவிட்டு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுப்பது சட்ட விரோதமானது’ என்று வாதிட்டார். இந்த வழக்கில் “மாணவர்களின் நலன் கருதி வரலாற்றிலேயே முதல்முறையாக ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைத்து அரசியல் கட்சிகளும் மத்திய அரசுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளது பெருமைக்குரியது” என்றும் கூறினார்.
இதையடுத்து தி.மு.க. சார்பில்  ஆஜரான மூத்த வக்கீல் பி.வில்சன், “உச்சநீதி மன்ற  தீர்ப்பு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, இட ஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றாமல் இருந்தால் மட்டுமே மத்திய அரசு முடிவெடுக்க முடியும். மத்திய அரசு, மருத்துவ படிப்புக்கு கவுன்சிலிங் நடத்தும் அமைப்பு மட்டுமே ஆகும்.
இட ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது. கடந்த 4 வருடங்களில் 3,580 இடங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு வழங்காததால் 2,700-க்கும் மேற்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட தமிழக மாணவர்களின் இடம் பறிபோனது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு அபகரித்துக் கொண்டிருக்கிறது’ என்றார்.
இதையடுத்து  மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில் பி.ஆர்.ராமன் ஆகியோர் ஆஜராகி மத்தியஅரசின் கருத்துக்களை தெரிவித்தனர்.
“மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு முறை பின்பற்ற கூடாது என இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் உள்ளன. தகுதியின் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். அதே நேரத்தில், உச்சநீதிமன்ற  உத்தரவின்படியே எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்க ளுக்கு இட ஒதுக்கீடு வழங்க அவசியமில்லை என்பதற்கான உச்சநீதி மன்றம்  மற்றும் பல உயர்நீதி மன்ற தீர்ப்புகள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் நிரம்பாமல் இருந்தால் மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்படும்” என்று தெரிவித்தனர்.
அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “மாநில அரசுகளின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்ற சுப்ரீம் கோட்டின் முந்தைய உத்தரவுகளுக்கு மத்திய அரசு ஏன் கட்டுப்பட வில்லை? என்று கேள்வி எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து பிற மனுதாரர்கள் சார்பில் ஆஜரான  மூத்த வக்கீல்கள் ஆஜராகி தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
 அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், “இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வருகிற 27ந்தேதி பிறப்பிக்கப்படும்” என்று உத்தரவிட்டனர்.

Post navigation

கறுப்பர் கூட்டம் பின்னணியில் அரசியல் சதி… அமைச்சர் ராஜேந்திரபாலாஜி
கோவை பெரியார் சிலை அவமதிப்பு: தமிழில் கண்டனம் தெரிவித்த ராகுல்…

Related Post

தமிழ் நாடு

தமிழகத்தில் புதிதாக 7 அரசு செவிலியர் கல்லூரிகள்! இந்த ஆண்டு முதலே மாணவர் சேர்க்கை…

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer