சென்னை:
ர்ச்சைக்குரிய கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி இருப்பதாக தமிழக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்து மக்களின் மனதை புண்படுத்தும் வகையில், கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பு, இந்துக் கடவுளான  கந்தசஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் வகையில் விளக்கம் வெளியிட்டது. இது நாடு முழுவதும் இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் ஏராளமான புகார்கள் பதிவு செய்யப்பட்டன.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, அந்த அமைப்பைச் சேர்ந்த சுரேந்திரன், வாசன் என இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பால்வளத்துறைஅமைச்சர் ராஜேந்திரபாலாஜி ,  மக்களிடையே மதக் கலவரத்தைத் தூண்டிவி டும் வகையில் கருத்து பதிவிடப்பட்ட கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் பின்னணியில் அரசியல் சதி இருக்கிறது குற்றம் சாட்டினார்.
கந்தசஷ்டி பற்றி ஆட்சேபகரமான கருத்து பதிவிடப்பட்ட யூடியூப் சேனல் மதரீதியாக மக்களைப் பிரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.  அந்தச் சதியை தமிழக அரசு முறியடிக்கும் என்றார்.
தினமும் ஓர் அறிக்கை என்ற அடிப்படையில் அதிமுக அரசு மீது ஸ்டாலின் பொய்யான தகவல்களைக் கொடுத்து அரசியல் செய்கிறார். அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.
கொரோனா பாதிப்பு வந்ததில் இருந்து கடந்த 4 மாதங்களில் எங்கும் ஆவின் பால் தட்டுப்பாடு கிடையாது. 33 லட்சம் லிட்டராக இருந்த கொள்முதல் இன்று 40 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.