சென்னை,

ருத்துவ மேற்படிப்பில் 50% இடஒதுக்கீடு விவகாரம் குறித்த மேல்முறையீட்டு வழக்கில்,  இரு நீதிபதிகள் முரண்பட்ட கருத்துக்களால் தலைமை நீதிபதியிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பான எம்.டி., எம்.எஸ் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு காலங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது,. இந்திய மருத்துவ கவுன்சிலின் புதிய விதிகளின்படி, இதுகுறித்த வழக்கில்,  ஏற்கனவே தமிழக மருத்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த  50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாகவும்,இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளை பின்பற்ற வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு  தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.

தனிநீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து அரசு மருத்துவர்கள் மற்றும் தமிழக அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பு கூறியது.  இரு நீதிபதிகளும்  மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளதால் வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கை நீதிபதிகள் சசிதரன், சுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது. இருவரும் மாறுபட்ட கருத்து தெரிவித்துள்ளனர்.

50% இடஒதுக்கீடு ரத்து செய்த உத்தரவு செல்லாது என நீதிபதி சசிதரன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், மற்றொரு நீதிபதியான சுப்பிரமணியம், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்வதாக கூறியுள்ளார்.

50 சதவீதம் இடஒதுக்கீடு தொடர வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள், பயிற்சி டாக்டர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து 15 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.