சென்னை: குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திப்பணிகளை மேற்கொண்ட அரசுத்துறை அதிகாரிகள் முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

மத்தியஅரசின் குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அந்த ஊர்திகள் தமிழ்நாட்டில் நடைபெற்ற குடியரசுத் தின விழாவில் பங்கு பெற்றது.  இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ஊர்திகள் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஊர்திகள் தமிழ்நாடு முழுவதும் அணிவகுக்கும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில், அலங்கார ஊர்திப் பணிகளை சிறப்பாக மேற்கொண்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., கூடுதல் இயக்குநர்  தி.அம்பலவாணன், இணை இயக்குநர்கள் ஆர்.ராஜசேகர், திஎம்.வெற்றிசெல்வன், அலுவலர் எஸ்.எம் திவாகர் உள்பட அதிகாரிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து  வாழ்த்து பெற்றனர்.