சென்னை:

வீடுகளில் உள்ள கிணறுகள், போர்வெல் குறித்து பதிவு செய்ய அறிவிறுத்தியிருந்த சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம், தற்போது, அதற்கான  ‘பாரம் (form)’ வெளியிட்டுஉ ள்ளது.

திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றில் 2வயது குழந்தை சுர்ஜித் விழுந்து இறந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள தரைமட்ட கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், பயன்படுத்தப்படாத கிணறுகள், குட்டைகள் குறித்து தகவல் சேமிக்கப்பட்டு, தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகங்கள் எடுத்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை போன்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளிலும், பொதுமக்கள் தங்கள் பயன்பாட்டுக்காக வீடுகளில்  உபயோகப்படுத்தி வரும்  கிணறுகள், போர்வெல் மற்றும் கைவிடப்பட்ட போர்வெல் குறித்து பதிவு செய்யும்படி சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம்  சென்னை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

நவம்பர் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று க அறிவுறுத்தி உள்ள சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் தற்போது, பதிவு செய்வதற்கான பாரம் (form) ஐயும் வெளியிட்டு உள்ளது.

ஏற்கனவே இதுதொடர்பாக சென்னை  மெட்ரோ வாட்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை பெருநகர பகுதி நிலத்தடி நீர் (ஒழுங்குமுறை) சட்டம், 1987 இன் விதிகளின்படி நவம்பர் 10 அல்லது அதற்கு முன்னர் தங்கள் வளாகத்தில் மூழ்கிய போர்வெல்கள் மற்றும் திறந்த கிணறுகளை பதிவு செய்யுமாறும்,  பயன்படுத்தப்படாத போர்வெல்களை மழைநீர் சேகரிப்பு கிணறுகளாக மாற்ற வேண்டும் அல்லது களிமண், மணல் மற்றும் கற்பாறை போன்றவற்றால்  தரை மட்டம் வரை பிற பொருட்களால் நிரப்ப வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளது.

உதவி தேவைப்படுவோர்   அருகிலுள்ள மெட்ரோ வாட்டர் டிப்போ அலுவலகத்திலிருந்து தொழில்நுட்ப உதவியை நாடலாம் அல்லது 044-28454080 ஐ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளது.

FORMX-Registerofwells