டில்லி

ணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் நடந்த கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் பைரேன் சிங்கை முதல்வராக தேர்வு செய்துள்ளனர்.

சமீபத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.  இதில் 4 மாநிலங்களில் பாஜகவும் பஞ்சப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும் வெற்றி பெற்றது.  முதல்முறையாகப் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

மீதமுள்ள 4 மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்ற போதிலும் எந்த ஒரு மாநிலத்திலும் இது வரை பாஜக ஆட்சி அமைக்கவில்லை.    இதற்கு கட்சியின் உட்கட்சிப் பூசலே காரணம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.  இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஏற்கனவே முதல்வராக உள்ள யோகி மீண்டும் முதல்வராக பங்கேற்க உள்ளார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்று நடந்த பாஜக சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் பைரேன் சிங் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இதையொட்டி அவர் அம்மாநில ஆளுநர் இல கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க  உரிமை கோர உள்ளார்.    மற்ற மாநிலங்களில் இதுவரை யார் முதல்வராவார் என்னும் கேள்விக்கு இதுவரை விடை கிடைக்காத நிலை உள்ளது.