சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுக்கப்பட்ட திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மீண்டும் மீண்டும் விசாரணைக்கு எடுத்துள்ளார். இதை எதிர்த்து அமைச்சர் பொன்முடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த கால திமுக மற்றும் அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த பலர்மீது சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்து, அவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க உதவி வருகின்றனர். இதனால், கீழமை நீதிமன்ற நீதிபதிகளும் அமைச்சர்கள் போன்ற முக்கிய நபர்களை வழக்கில் இருந்து விடுவித்து விடுகின்றனர்.  சமீப காலமாக திமுக அமைச்சர்களாக இருக்கும், பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர், ஐ.பெரியசாமி, தங்கம் தென்னரசு போன்றோர்  வழக்குகளில் இருந்து கீழமை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.  இதுபோன்ற நடவடிக்கைகள் நீதித்துறை மீதான நம்பிக்கையை தகர்ந்தெறிந்து வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

தற்போது உயர்கல்வித்துறை அமைச்சர்  பொறுப்பி உள்ள பொன்முடி கடந்த 1996 முதல் 2002 ஆண்டு வரையிலான திமுக ஆட்சியின்போது,  வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அமைச்சர் பொன்முடியுடன் அவரது மனைவி விசாலாட்சி , பொன்முடியின் மாமியார் சரஸ்வதி, சிகா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் மணிவண்ணன் , அறங்காவலர் நந்தகோபால் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 66 மதிப்பிலான முரணான சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்றும் போதிய ஆதாரமில்லை என்று கூறியும் நீதிமன்றம் அவர்களை விடுவித்தது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவர்கள்மீதான வழக்கை மீண்டும் தானாகவே விசாரணைக்கு எடுத்தார். மேலும், லஞ்ச ஒழிப்பு காவல் துறை மற்றும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளின் நடவடிக்கைகளையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, திமுக சார்பில், நீதிபதியின் நடவடிக்கை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. மேலும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையும், இந்த  வழக்குகளை வேறுநீதிபதிக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதுவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அமைச்சர் பொன்முடி சார்பில் உயர்நீதிமன்ற வழக்குக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. தன்மீதான சொத்துக்குவிப்பு வழக்கை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிப்பதை எதிர்த்து, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த மனு மீதான விசாரணை விரைவில் பட்டியலிடப்படும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷை மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு மாற்றி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வழக்கும் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: தானே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவிப்பு!

அமைச்சர்களுக்கு எதிரான வழக்கை நானே விசாரிப்பேன் என்று அறிவித்த  நீதிபதி திடீர் மாற்றம்!

லஞ்ச ஒழிப்புதுறையை ‘பச்சோந்தி’ என விமர்சனம்: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை!