மும்பை

ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவன சொத்துக்களை கடனுக்காக ஜியோ நிறுவனத்துக்கு விற்பனை செய்ய பங்குதாரர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

ரிலையன்ஸ் தொலைதொடர்பு நிறுவனம் கடன் சுமை காரணமாக தனது ஸ்பெக்ட்ரம் அலைவரிசை, தொலைதொடர்பு கோபுரங்கள்,  அப்டிக் ஃபைபர் கேபில்கள்கள் உட்பட பல சொத்துக்களை விற்க முன் வந்தது.    அதை ரிலையன்ஸ் தொலை தொடர்பு உரிமையாளரின் சகோதரர் நடத்தும் ஜியோ நிறுவனம் வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்தது.

இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்தின் பங்கு தாரர் கூட்டம் நடைபெற்றது.   அந்தக் கூட்டத்தில் ஜியோ நிறுவனத்துக்கு சொத்துக்களை விற்பனை செய்து கடனை அடைக்க பங்குதாரர்கள் அனுமதி அளித்துள்ளனர்.

”இதன் மூலம் வரும் மார்ச் மாத இறுதிக்குள் இந்த சொத்துக்கள் விற்பனை செய்யப்படும்.   இதனால்  ரிலையன்ஸ் தொலை தொடர்பு நிறுவனத்தின்  கடன்களில் ரூ.25,000 கோடி அளவிலான கடன்களை அடைக்க முடியும்” என அந்நிறுவனம் அறிவித்துள்ளது..