ஷில்லாங்க்:

மேகாலயா சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு வேட்பாளர் உள்பட 4 பேர் பலியானார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேகாலயா சட்டசபை தேர்தல் வரும் 27ந்தேதி நடைபெற உள்து. இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது.

ஏற்கனவே, மேகாலாயா மாநிலத்தை தனி நாடாக அறிவிக்கக்கோரி காரா தேசிய விடுதலை ராணுவம் என்ற பயங்கரவாதிகள் அமைப்ப்பு போராடி வருகிறது.‘

இந்நிலையில், நேற்று தேர்தல் பிரசாரத்தின்போது, இந்த அமைப்பினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த   தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் உட்பட 4 பேர் பலியாகினர்.

வில்லியம்நகர் தொகுதி தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் ஜோனாதோன் என் சங்மா தேர்தல் பிரசாரத்திற்கு சென்றிருந்தபோது, அவர் செல்லும் சாலையில் வெடிகுண்டை வெடிக்க வைத்து பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈமுடுபட்டனர்.

இதில் ஜோனாதோன் என் சங்மா உட்பட 4 பேர் பலியாகினர். அதைத்தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.