1-rocm1
டில்லி:
ந்தியாவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனங்களான அனில் அம்பானியின்  ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனமும், ஏர்செல்லும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.  இந்த இரு நிறுவனங்க ளும் இணைந்தால் அது இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உருவெடுக்கும்.
இந்தியாவில் தொலை தொடர்புத் துறையில் 9.87 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்  நிறுவனம்  நான்காவது இடத்திலும், 8.8 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்செல் நிறுவனம் ஆறாவது இடத்திலும் உள்ளன. இந்த இணைப்புக்கான பேச்சுவார்த்தை கடந்த டிசம்பரிலிருந்து நடந்து வருகிறது.
இணைப்புக்குப் பின் ரிலைன்யன்ஸ் நிறுவனத்தின் ஆர்காம் பாதி சொத்துக்களையும், ஏர்செல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மலேசியாவின் மேக்ஸிஸ் கம்யூனிகேஷன்ஸ் பாதி சொத்துக்களையும் உரிமை கொள்ளும். மேலும் இவ்விணைப்பின் மூலம் இரு நிறுவனங்களின் கடன் சுமையும் வெகுவாகக் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1-rocm
நன்றி:  http://profit.ndtv.com/news/tech-media-telecom/article-reliance-communications-announces-merger-with-aircel-to-create-rs-65000-crore-entity-1458658?site=full & ET