மதிய செய்திகள்!

Must read

afternoon-news
ரஷியாவில் பாராளுமன்ற தேர்தல்: கோவாவில் வாழும் ரஷிய மக்கள் வாக்களித்தனர்
உள்ளாட்சி தேர்தலுக்கு அடுத்த மாதம் பூத் சிலிப் வழங்கப்படும்: தமிழக தேர்தல் ஆணையர் தகவல்
நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தீக்குளித்த வாலிபர் மரணம்: சீமான் அஞ்சலி
இரண்டாவது முறையாக விண்வெளி ஆய்வு கலத்தை சீனா விண்ணில் செலுத்தியது
தைவான், சீனாவை சூறையாடிய கோரப் புயலுக்கு 11 பேர் பலி
சென்னையில் நேற்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பேரணியின் போது தீக்குளித்த விக்னேஷ் என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
விக்னேஷ் உடலை சீமான் அலுவலகத்துக்கு கொண்டு செல்ல போலீசார் அனுமதி
சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை 20-ந்தேதி திறப்பு: ஜெயலலிதா அறிவிப்பு
தமிழக பந்த் காரணமாக இரு மாநில எல்லைகளிலும் போலீசார் குவிப்பு எந்த வாகனங்களையும் தமிழகத்திற்கு அனுமதிக்க விடாமல் கர்நாடக எல்லையில் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாரில் தாய் – மகள்கள் 4 பேர் தூக்குபோட்டு தற்கொலை.
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்காக அதிமுகவில் 5 பேர் கொண்ட மேற்பார்வைக் குழு அமைக்கப்பட்டது இதை 14 பேர் கொண்ட குழுவாக மாற்றியுள்ளார் ஜெயலலிதா.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு காவேரி விவகாரம் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழு அடைப்பு காரணமாக சென்னையில் கடைகள் மட்டும் அடைக்கப்பட்டுள்ளன. எனினும் பேருந்துகள் வழக்கம் போல ஓடுவதால் பொது மக்களுக்கு எந்த இடையூறும் இல்லை.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இப்போராட்டத்தில் பங்கேற்கவில்லை – பிரேமலதா விஜயகாந்த்.
அனைத்து ஆறுகளையும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் – விக்ரமராஜா.
இந்தியாவில் தண்ணீருக்கு என்று தனியாக ஆணையம் ஏற்படுத்த வேண்டும் கட்சி கொடியேற்று விழாவில் சரத்குமார் பேச்சு.
சென்னையில் ஸ்டாலின், கனிமொழி, திருமா , பி.ஆர்.பாண்டியன், வேல்முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைகோ, ஐ.பெரியசாமி, பொன்முடி, கே.என்.நேரு அகியோர் கைதாகியுள்ளனர்.
சாலை மற்றும் ரயில் மறியலில் ஈடுபட்ட லட்கணக்கானோர் கைது.
முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழக மீனவர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
விசைப்படகுகள் இன்று கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
மீன் மார்க்கெட் மூடப்பட்டுள்ளதால் காசிமேட்டில் 20 டன் மீன்கள் தேக்கமடைந்துள்ளது.
புதுச்சேரி காமராஜ் சாலையில் திறந்து வைக்கப்பட்டிருந்த மதுபான கடை அடித்து நொறுக்கப்பட்டது.
காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசை கண்டித்தும் கர்நாடகா பாரதிய ஜனதா கட்சியையும் கண்டித்தும் ஈரோடு தலைமை தபால் அலுவலகம் முற்றுகையிட்ட தமிழ்புலிகள் கட்சியினர் 41 பேர் கைது.
கர்நாடக அரசை கண்டித்து திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பில் 16, 17 ம் தேதிகள்  இரு தினங்கள் வழக்கறிஞர்கள்  நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்.
புதுச்சேரியில் பிரதமர் மற்றும் கர்நாடக முதல்வர் உருவ பொம்மைகளை பெரியார் திராவிட கழகத்தினர் எரித்தனர்
ஜியோ சிம் செயலிழப்புக்கு வோடபோன், ஏர்டெல், ஐடியா நிறுவனங்களே காரணம் என முகேஷ் அம்பானி குற்றச்சாட்டு.

More articles

Latest article