பே டிஎம் எனும் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி இனி புதிய பயனர்களுக்கு சேவை வழங்க தடை விதித்து இரண்டு தினங்களுக்கு முன் ஆர்.பி.ஐ. அறிவிப்பு வெளியிட்டது.

இந்நிலையில், பே டிஎம் நிறுவனம் தனது பயனர்களின் தரவுகளை சீன நிறுவனங்களுடன் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஆர்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய தணிக்கையில் இந்த விவரம் தெரிய வந்ததை அடுத்தே பே டிஎம் நிறுவனத்தின் மீது தடை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீன நிறுவனத்தின் மறைமுக முதலீட்டை பெற்றுள்ள பே டிஎம் நிறுவனம் இந்திய பயனர்களின் தரவுகளை சீன சர்வர்களில் பதிவேற்றிவந்தது இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டத்திற்கு புறம்பானது என்று கூறப்படும் நிலையில் அந்நிறுவனத்தின் மீது வேறு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.