டில்லி

ந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வைரல் ஆசார்யா பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வந்தது தெரிந்ததே.     ஒரு கட்டத்துக்கு மேல் பொறுமை இழந்த உர்ஜித் படேல் தனது பதவியை கடந்த டிசம்பர் மாதம் ராஜினாமா செய்தார்.    ஆயினும் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே பல விவகாரங்களில் முரண்பாடு இன்னும் நீடித்து வருகிறது.

உர்ஜித் படேல் பதவி விலகலுக்கு பிறகு சந்திரகாந்த் தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.  உர்ஜித் படேலுடன் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநரான வைரல் ஆசார்யா பதவி விலகுவார் என தகவல்கள் வந்தன  ஆனால்  ரிசவ்ர் வங்கி தரப்பு இந்த தகவலை மறுத்துள்ளது.   இந்நிலையில் வைரல் ஆசார்யா பதவி விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வைரல் ஆசார்யாவின் பதவிக்காலம் முடிய இன்னும் ஆறு மாதங்கள் உள்ளன.   உர்ஜித் படேல் ஆளுநராக இருந்த போதே வைரல் ஆசார்யா, “ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தன்மையை பாதிக்கும் அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.   இந்த சுதந்திரத் தன்மை பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்” என கூறி இருந்தார்.

தற்போது ரிசர்வ் வக்கியின் தலைமை இயக்குனர் மைக்கேல் பாத்ரா மற்றும் நிதி அமைச்சக அதிகாரி சஞ்சீவ் சன்யால் ஆகியோர் துணை ஆளுநராக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.   இதை தவிர மற்றொரு துணை ஆளுநராக பதவி வகித்து வரும் விஸ்வநாதனின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் எனவும் செய்திகள் வருகின்றன.