ர்ஸ்வான், ஜார்க்கண்ட்

ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் திருடப்பட்டதாக சந்தேகப்பட்ட இளைஞர் ஜெய்ஸ்ரீராம் என சொல்லாததால் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்த தப்ரீஸ் அன்சாரி என்னும் ஒரு இஸ்லாமிய இளைஞர் புனே நகரில் வெல்டராக பணி புரிந்து வருகிறார்.   இவர் ரம்ஜானை முன்னிட்டு தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.   அவருக்கு தற்போது திருமண ஏற்பாடுகளை அவரது வீட்டினர் செய்து வருகின்றனர்.   அவரை கடந்த 18 ஆம் தேதி அன்று இரு இஸ்லாமிய நண்பர்கள் ஜாம்ஷெட்பூர் செல்லலாம் என அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை ஒரு கும்பல் வழி மறித்ததாக கூறப்படுகிறது.   தப்ரீஸ் உடன் வந்த இருவரும் ஓடி விடவே இவரை அனைவரும் பிடித்து திருடன் என சந்தேகப்பட்டு அடித்து உதைத்துள்ளனர்.    தமக்கு ஒன்றும் தெரியாது எனவும் தாம் ஜாம்ஷெட்பூர் செல்ல வந்ததாகவும் தப்ரீஸ் கூறியதை கண்டுக் கொள்ளாத அவரகள் அவரை கட்டி வைத்து கடுமையாக தடிகளால் தாக்கி உள்ளனர்.

தப்ரீஸ் ஒரு இஸ்லாமியர் என்பதை அறிந்துக் கொண்ட ஒருவர் அவரை ‘ஜெய்ஸ்ரீராம்’ எனவும் ‘ஜெய் ஹனுமான்” எனவும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.   அதற்கு தப்ரீஸ் மறுத்ததால் அவரை கும்பல் மேலும் தாக்கி உள்ளது.   அவரை தாக்கிய கும்பலிடம் இருந்து காவல்துறையினர் மீட்டு கைது செய்துள்ளனர்.    அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் தப்ரீஸ் நிலை மோசமானதால் அவரை கடந்த 22 ஆம் தேதி காவல்துறையினர் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளித்துள்ளனர்.   தீவிர சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் தப்ரீஸ் நேற்று மரணம் அடைந்துள்ளர்.  அவர் மரணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

இந்த நிகழ்வு முகமது ஆசிஃப் கான் என்பவரால் டிவிட்டரில் பதியப்பட்டுள்ளது.   நமது வாசகர்களுக்காக அந்த டிவிட்டர் பதிவு இதோ