டில்லி

ங்கிகளில் லாக்கர்களில் பொருட்களை வைத்திருப்போருக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றி அறிவித்துள்ளது.

வங்கி லாக்கர்கள் எனப்படும் பாதுகாப்பு பெட்டகங்களில் மக்களில் பலர் மதிப்புமிக்க பொருட்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவற்றைப் பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம்,  இதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி மாற்றி உள்ளது.   இந்த மாற்றம் வரும் 2022 ஜனவரி மாதம் 1 முதல் அமலாகிறது.    இதன் விவரங்கள் பின் வருமாறு

  1. பெட்டகத்தில்வைக்கப்பட்ட பொருட்களின் பாதிப்பிற்கு இழப்பீடு

இந்த ரிசர்வ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்களின்படி, வங்கிகளின் அலட்சியம் காரணமாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என புதிய விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், இயற்கை பேரிடர், அதாவது, பூகம்பம், வெள்ளம், மின்னல், புயல் மற்றும் சூறாவளி போன்றவற்றினால் ஏற்படும் எந்த இழப்பிற்கும் வங்கி பொறுப்பேற்காது. இதனால் வங்கி அதன் பொறுப்புகளிலிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்படும் என பொருள் அல்ல. மாறாக வங்கிகள் இத்தகைய இடர்பாடுகளிலிருந்து பெட்டகங்களைப் பாதுகாக்கச் சரியான ஏற்பாடுகளை உறுதி செய்ய வேண்டும்.

  1. .திருட்டு அல்லது மோசடி நடந்தால், வங்கி இழப்பீடு கொடுக்கும்

வங்கி பெட்டகங்கள் இருக்கும் வளாகத்தின் பாதுகாப்பின் முழுப் பொறுப்பும் வங்கியிடமே இருக்கும். தற்போதைய ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கி ஊழியர்களின் அலட்சியம் காரணமாக, தீ, திருட்டு, கட்டிடம் இடிந்து விழுந்தால் அல்லது மோசடி நடந்தால், வங்கிகளே  பொறுப்பு ஆகும்.  வங்கிகள் பெட்டகத்துக்காக வசூலிக்கும் ஆண்டு வாடகையின் 100 மடங்கு என்ற அளவில் இழப்பீடு வழங்க வேண்டும்.

  1. வாடகைபணம் செலுத்தப்படாவிட்டால் பெட்டகத்தைத் திறக்கலாம்

வங்கி பெட்டகத்துக்கான வாடகையைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாடிக்கையாளர் செலுத்தப்படாவிட்டால், வங்கி அதன் மீது நடவடிக்கை எடுக்கலாம். மேலும், உரிய வழிமுறையைப் பின்பற்றி எந்த பெட்டகத்தையும் திறக்கலாம்.

  1. பெட்டகங்களில்சட்டவிரோதமான பொருட்களை வைக்கக் கூடாது

ரிசர்வ் வங்கியின் புதிய விதிகளின்படி, வங்கிகள் பெட்டகம் ஒப்பந்தத்தில் ஒரு விதிமுறையைச் சேர்க்க வேண்டும், அதன் கீழ் லாக்கர் வாடகை வாடிக்கையாளர் சட்டவிரோதமான அல்லது ஆபத்தான பொருட்களை பெட்டகத்தில் வைத்திருக்க முடியாது.

  1. காத்திருப்புபட்டியல் எண் வெளியிடப்படும்

வாடிக்கையாளர்களுக்கு பெட்டகம் செயல்பாடுகளின் விபரங்களை எஸ்எம்எஸ் (SMS) மற்றும் மின்னஞ்சல் (e-mail) ஆகியவற்றை வங்கிகள் அனுப்ப வேண்டியது அவசியம். வங்கி பெட்டகம் ஒதுக்கீட்டிற்கான அனைத்து விண்ணப்பங்களுக்கும் வங்கிகள் ரசீது வழங்க வேண்டும். பெட்டகம் கிடைக்காதோருக்கு, வங்கிகள் காத்திருக்கும் பட்டியலின் எண் தொடர்பான தகவல்களைக் கொடுக்க வேண்டும்.

  1. வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் புதிய வசதிகள்

வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதிக்கு விண்ணப்பித்தவர்களின், CDD (Customer Due Diligence) விதிமுறைகளுடன் முழுமையாக இணங்குவோருக்கு பெட்டகம் வசதியை வழங்கலாம். புதிய விதியின் படி, தனது வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், வங்கி தொடர்பும் இல்லாத பிற வாடிக்கையாளர்களுக்கும் பெட்டகம் வசதியை வழங்க முடியும்.

  1. லாக்கர்களை இடம் மாற்றுவதற்கான புதிய விதிகள்

வங்கிகள் தங்கள் பெட்டகத்தை லாக்கரை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு வாடிக்கையாளருக்கு அறிவித்த பின்னரே மாற்ற முடியும்.   வாடிக்கையாளர்களின் டெர்ம் டெபாஸிட் வைப்புத்தொகையை பெட்டகம் வாடகையாகப் பயன்படுத்தலாம். வங்கிகள் ஸ்ட்ராங் ரூம்/பெட்டகங்களை அதாவது பெட்டகங்களைப் பாதுகாக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நுழைவு மற்றும் வெளியேறும் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் குறைந்தபட்சம் 180 நாட்கள் வரை பாதுகாத்து வைத்திருப்பது அவசியம்.

என மாற்றப்பட உள்ளது.