சென்னை:

மிழகத்தில் அதிகரித்து வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க, அரசு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வருகிறது. இந்த லாரிகளை இயக்கும் டிரைவர்கள், கண்மண் தெரியாமல் இயக்குவதால், ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதைத்தொடர்ந்து கண்மூடித்தனமாக லாரிகளை இயக்கும் ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கையும், அதுபோன்ற ஓட்டுநர்களை பணியில் அமர்த்தக்கூடாது என்று லாரி உரிமை யாளர்களுக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி உள்ளனர்.

கோடை தண்ணீர் தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தற்போது தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலை யில், தண்ணீர் லாரிகளால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் விபத்துகளில் 4 உயிர்கள் பலியாவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகார்கள்  அதிகரித்து வரும் நிலையில், தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் மோசமாக ஓட்டுவதை தவிர்த்து, கவனமாக ஓட்ட  வேண்டும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ள னர்.

சென்னை குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும்  லாரிகள் மூலம்  24 மணிநேரமும் தண்ணீர் லாரிகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு சுமார் 8300 டிரிப்கள் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சுமார் 700 லாரிகள் ஒருநாளைக்கு குறைந்தது 5 டிரிப் தண்ணீர் விநியோகம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் காலை 8 மணி முதல் 11 மணி வரையும், மாலையில் 5 மணி முதல் 9 மணி வரை மெட்ரோ வாட்டர் லாரிகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், லாரிகளை பாதுகாப்பாக இயக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், காவல் ஆணையர் அலுவலகத்தில்  நடைபெற்றது. இணை ஆணையர் சுதாகர் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், ஓட்டுநர்களுக்கு ஓய்வளிக்கும் வகையில் மாற்று ஓட்டுநர்கள் இருக்க வேண்டும், உரிமம் இல்லாதவர்களை லாரி ஓட்ட அனுமதிக்கக் கூடாது, சிறார்களை பணியில் அமர்த்தக் கூடாது போன்ற அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய லாரி உரிமையாளர்கள், சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் சுமார் 4500 தண்ணீர் லாரிகள் இயக்கப்பட்டு வருவததாகவும், பொதுவாக இரவு நேரங்களிலேயே தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது என்று கூறியவர்கள்,.  லாரி டிரைவர்களுக்கு கொடுத்து வருவதாகவும்,  விபத்துகள்  நடக்காமல் தடுக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

ஒவ்வொரு பகுதியிலும் குறைந்தது 450 டிரிப்  செல்ல வேண்டியது இருக்கிறது என்றவர்கள், நாங்கள் எச்சரிக்கையுடன் இயக்கவும்  மற்றும் வேகம் தவிர்க்கவும்  டிரைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளோம் என்றும் கூறி உள்ளனர்.