புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில்வ 4வது முறையாக முதல்வர் பதவி ஏற்ற ரங்கசாமி , முதல் கையெழுத்தாக முதியோர், விதவை பென்சன் உள்பட 3 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் என்ஆர்காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது.இதையடுத்து,  முதல்வராக  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர்  என்.ரங்கசாமி. நான்காவது முறையாக இன்று துச்சேரி பிரதேச முதல்வராக அவர் பொறுப்பேற்றார். ரங்கசாமி ஏற்கனவே  2001, 2006 மற்றும் 2011ல் அவர் முதல்வராக பணியாற்றி உள்ள நிலையில், தற்போது 4வது முறையாக முதல்வர் பொறுப்பேற்றுள்ளார். இன்றைய பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் யாரும் பதவி ஏற்கவில்லை.

பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி முடிவடைந்ததும்,  புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறைக்கு சென்றார். அவருக்கு அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். அதையடுத்து  முதல்வர் அறையில் அமர்ந்த ரங்கசாமி மூன்று கோப்புகளில் கையெழுதிட்டார்.  அதன்படி,

நிலுவையில் உள்ள 2 மாதத்திற்கான அரிசி வழங்குவது. 

விண்ணப்பித்த முதியோர், விதவைகள் 10 ஆயிரம் பேருக்கு புதியதாக பென்ஷன் வழங்க அனுமதி, 

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சென்டாக் உதவித்தொகை வழங்கல்

ஆகிய 3 கோப்புகளில்  கையெழுத்திட்டார்.