புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் புதிய முதல்வர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித்தலைவர் என்.ஆர்.ரங்கசாமி பதவி ஏற்றார். அவருக்கு புதுச்சேரி பொறுப்பு துணைநலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆளுநர் தமிழிசை தமிழில் பதவி பிரமாணம் செய்து வைத்த நிகழ்வு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நடைபெற்ற முடிந்த புதுச்சேரி ட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரசும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில்  என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பா.ஜ.க. 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.இதில் மெஜாரிட்டி என்.ஆர்.காங்கிரஸ் என்பதால் அக்கட்சியினர் ஒருமனதாக என்.ரங்கசாமியை முதல்வராக தேர்வு செய்தனர். ஆனால் அமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில்,  என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி இன்று முதல்வராக பதவி ஏற்றார்.  4வது முறையாக பதவி ஏற்ற  அவருக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இன்றைய பதவி ஏற்பு விழாவில்  அமைச்சர்கள் யாரும் பொறுப்பேற்கவில்லை.

இந்த விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜ.க. கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் கலந்துகொண்டார்.