டெல்லி: தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தி உள்பட அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள் உள்பட பல தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தன்னுடைய டவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  “தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்” என தெரிவித்து உள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், எம்.பி.களுடன் காணொலியில் ஆலோசித்த சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார்.

இதையடுத்து வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்பட  அனைவருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.