பாஜக-வால் கொண்டாடப்பட்ட தலைவர்களில் ஒருவரான அப்துல் கலாம் ‘உழைப்பு ஒன்றே வழிபாடு’ என்ற கொள்கையுடன் செயல்பட்டதுடன் தான் இறந்தால் அன்றைய தினம் விடுமுறை விடாமல் பணி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், ராமர் கோயில் அறக்கட்டளை நடத்தும் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்காக நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த உத்தரவை தொடர்ந்து பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களில் ராம சேவைக்காக பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

ரயில் சேவை முதல் உணவகங்களின் சேவை வரை அனைத்தும் பாதிக்கப்படுவதுடன் இதனால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் மிகப்பெரிய அரசு மருத்துவமனைகளில் ஒன்றான டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஜனவரி 22ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு மேல் தான் இயங்கும் என்று அறிவித்துள்ளது.

அவசர சிகிச்சை தவிர மற்ற எந்த சேவையும் இயங்காது என்று தெரிவித்துள்ளது.

இதேபோல் அன்றைய தினம் அயோத்தியைச் சுற்றியுள்ள நதிக்கரைகள் மற்றும் தகன மேடைகளில் எந்தவொரு பிணமும் எரிக்கப்பட்ட வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

மத்திய பாஜக அரசின் இந்த நடவடிக்கை ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை வாக்கு வங்கி அரசியலாக்கும் முயற்சி என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

அயோத்தியில் முகாமிட்டுள்ள தேசிய பேரிடர் மீட்புக் குழு…