ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராம் லல்லாவை வரவேற்க அயோத்தி மாநகரமே பேனர்கள் தோரணங்கள் என்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் மேற்கொண்டு வருகிறது.

வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்கள் வசதிக்காக அயோத்தி வளர்ச்சிக் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் திறந்தவெளியில் படுக்கை வசதிகளுடன் கூடிய முகாம்கள் அமைத்து பக்தர்கள் தங்குவதற்கு வசதிகள் செய்துள்ளது.

திங்களன்று நடைபெற உள்ள ராமர் சிலை பிரதிஷ்டை விழாவுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ள நிலையில் இந்த விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கு அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

முக்கிய பிரமுகர்கள் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ள இந்த நிகழ்ச்சியின் எந்த வித அசம்பாவிதமும் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் அயோத்தியில் முகாமிட்டுள்ளனர்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு 3 நாள் முன்னதாகவே தயாரான சுமார் 3 லட்சம் லட்டுகள்