பாபர் மசூதி வழக்கு: உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு!

Must read

டில்லி,

ராமர் கோவில் – பாபர் மசூதி வழக்கில் உச்சநீதி மன்ற அறிவுரைக்கு அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வரவேற்பு தெரிவித்து உள்ளது.

மேலும், உச்சநீதி மன்ற கண்காணிப்பில் பேச்சு வார்த்தைக்கு தயார் என்றும் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய ஒருங்கைண்பாளர் மவுலானா  அறிவித்துள்ளார்.

ராமர்கோவில்-பாபர் மசூதி தொடர்பான வழக்கு விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி, இந்த பிரச்சினையில் இரு தரப்பினர் மனதும் புண்படாத வகையில், கோர்ட்டுக்கு வெளியே பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வலியுறுத்தினார்.

“இது ஒரு உணர்வு பிரச்சினை. இதில் இரு தரப்பினரும் ஒன்றாக உட்கார்ந்து பேசி தீர்த்துக்கொள்ள முயற்சி செய்யவேண்டும். தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டு மத்தியஸ்தம் செய்ய தயார்” என்றும் தலைமை நீதிபதி கேகர் கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை,  முஸ்லிம் தனி நபர் சட்டவாரியம் உறுப்பினர் மவுலானா காலிட் ரஷீத் (Maulana Khalid Rasheed)  வரவேற்றுள்ளார்.

அதுபோலவே, மற்றொரு முஸ்லீம் மதகுருவான மவுலானா சுகைப் காஷ்மி (Moulana Suhaib Qasmi) என்பவரும் வரவேற்று  கூறுகையில், இருதரப்பினரும் இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தியிருப்பபை வரவேற்றுள்ளார்.

அதேவேளையில், பாரதியஜனதாவும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று உள்ளது. அதுபோல பாரதியஜனதாவின்  தாய்அமைப்பான  ஆர்எஸ்எஸ்-சும் உச்சநீதி மன்ற ஆலோசனையை வரவேற்று உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த அறிவுரை காணமாக, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ராமர்கோவில்- பாபர் மசூதி பிரச்சினை தீர்க்க இதுவே சிறந்த வழி என்றும் கூறி உள்ளது.

ஆனால், இஸ்லாமியர்களின் வக்பு வாரியம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நிராகரித்து உள்ளது.

அதுபோல், பாபர் மசூதி நடவடிக்கை குழு (BMAC) ஒருங்கிணைப்பாளர் ஜபாரப் ஜிலானி (Zafaryab jilani), சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு சாத்தியமற்றது என்று கூறி உள்ளார்.

இந்த பிரச்சினை நீண்ட காலமாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆகவே, இதில் நீதிமன்றம் தன்னை உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை, பல கட்சிகள் மற்றும் அமைப்பினர் வரவேற்றுள்ள நிலையில், ஒருசில அமைப்பினர் நிராகரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More articles

Latest article