டெல்லி,  

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித்திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களில் 87 லட்சம் பேர் போலி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் ராம் கிரிபால்யாதவ்,   மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதித் திட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி உரியமுறையில் பயனாளர்களுகச் செனறடைகிறதா  என்பதை  தனது அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டதாக கூறனார்.

அந்த ஆய்வில் 87 லட்சம் பயனாளர் அட்டைகள் போலியானவை  என  கண்டுபிடித்துள்ளதாக அமைச்சர்  ராம் கிரிபால்யாதவ் தெரிவித்தார்.  அவர்களின் பெயர்கள் அனைத்தும் நீக்கப்பட்டு விட்டன என்றும் அவர் கூறினார்.

இந்த திட்டத்தில் 100 நாட்கள் வேலை நாட்களாக உள்ளன. ஆனால் மத்திய அரசு வறட்சி பாதித்த பகுதிகளில் வேலைநாட்களின் எண்ணிக்கையை 100லிருந்து 150 ஆக அதிகரித்துள்ளது.  87 லட்சம்  போலி பயனாளர்களில் பெரும்பாலானவை உயிரிழந்தவர்களின் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்து பலகோடி ரூபாய் அபேஸ் செய்துள்ளது அம்பலமாகி உள்ளது.