சுத்தமான குடிநீர் கிடைக்காமல் இந்தியாவில் ஆறரை கோடி பேர் அவதி!

Must read

டில்லி,

இந்தியாவில் ஆறரை கோடி பேருக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை என வாட்டர் எய்ட் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் இந்தியாவில் தண்ணீர்ப் பிரச்னை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த அறிக்கையை  உலக தண்ணீர் தினமான இன்று அதன் தலைமை செயல்அதிகாரி வி.கே. மாதவன் வெளியிட்டார்.

அதில், இந்தியாவில் 63.4 மில்லியன் அதாவது 6 கோடியே 3 லட்சம் பேர் தூய்மையான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிராமப்புறங்களில் 67 சதவிதம் பேர் வசிக்கின்றனர்.

இவர்களில் 7 சதவிதத்தினருக்கு சுத்தமான குடிதண்ணீர் கிடைக்கவில்லை என்றும் பருவநிலை மாற்றம்,  வானிலை மாற்றம் போன்றவற்றால் கிராமப்புறங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய கிராமப்புறங்களில் கிடைக்கும் குடிதண்ணீரில் இரும்புச்சத்து இருப்பதால் 30 சதவிதம் பேருக்கு  சுவாசப்பிரச்னை போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோல் 21 சதவிதம் பேர் ஆர்சனிக் அமிலம் உள்ள குடிதண்ணீரை அருந்தியதால் தோல் நோய் மற்றும் புற்றுநோயில்

அவதிப்படுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக தனிநபருக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து வருவதாகவும் அதனால் தனிநபருக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரின் அளவும் குறைந்து வருவதாகவும் மத்திய சுற்றுச்சூழல்அமைச்சகம் தெரிவித்துள்ளது.

More articles

Latest article