டில்லி :

ரும் ஏப்ரல் மாதத்துடன் காலியாகும்  25 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் இன்று  தொடங்கியது.

காலியாகும் 58 மாநிலங்களவை உறுப்பினர்களில்,  33 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில், 25 உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் இன்று தொடங்கியது.

உத்தர பிரதேஷ், மேற்குவங்கம் , தெலுங்கானா ,கர்நாடக, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 6  மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாக மார்ச் 12ந்தேதி என்றும், வாக்குப்பதிவு மார்ச் 23ந்தேதி என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது..

அதுதவிர, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்த கேரள எம்.பி. வீரேந்திர குமாரின் இடத்துக்கும் இன்றும் தேர்தல் நடைபெற்று வருகிறது.

தற்போது மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த மத்திய மந்திரிகளாக பதவி வகித்து வரும்,  ரவி சங்கர் பிரசாத், ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், தாவர்சந்த் கேலாட், ராம்தாஸ் அத்வாலே உள்பட 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியுடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.