டில்லி

நேற்று நடுவர் மற்றும் சமரச மைய சட்டத் திருத்தத்துக்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு நிறுவனத்தில் பங்குதாரர்கள் இடையே பிரச்சினைகள் நேரும் போது அவர்கள் தேசிய நடுவர் மற்றும் சமரச மையத்திடம் விண்ணப்பம் செய்கின்றனர்.   இந்த விண்ணப்பங்கள் பல நேரங்களில் குறைந்த நேரத்தில் முடிக்கப்படாமல் இழுக்கடிக்கப் படுவதாக பலரும் குறை கூறி வருகின்றனர்.

அது மட்டுமின்றி இவ்வாறு இழுக்கடிக்கப்படுவதால் அந்த நடுவர் மையத்தினர் இதற்காக பணம் பெறுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளன.  இதையொட்டி மத்திய அரசு இந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்தது.   இந்த சட்டத்திருத்த மசோதா மக்களவையில் ஒப்புதல் பெற்றதை அடுத்து மாநிலங்களவையில் அளிக்கப்பட்டது.

 

நேற்று மாநிலங்களவையில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த சட்டத்தின்படி இனி நடுவர் மையம் தங்கள் விசாரணையை ஆறு மாதங்களுக்குள் முடித்து விட வேண்டும் எனவும் அதிக பட்சம் 12 மாதங்களுக்குள் முழு நடவடிக்கைகளும் முடிய வேண்டும் எனவும் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.