டந்த சில ஆண்டுகளாக அரசியல் கட்சித்தொடங்கப்போவதாக கூறி வந்த ரஜினி, தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளார். ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31ந்தேதி அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளதுடன் பல்வேறு ‘பஞ்ச்’ டயலாக்குகளையும் அள்ளி வீசியுள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்று தமிழகஅரசியல் கட்சிகள் நம்பிக்கொண்டிருந்த  நிலையில், அவரது திடீர் அரசியல் கட்சி அறிவிப்பு தமிழக அரசியல்கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பது கண்கூடாக தெரிகிறது.

ஏற்கனவே கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், சீமானின் நாம் தமிழர் போன்ற கட்சிகள், திராவிட கட்சிகளில் உள்ள  இளைஞர்களை தங்களுக்கு சாதகமாக்கி வரும் வேளையில், தற்போது ரஜினியின் அரசியல் அறிவிப்பு, அதிமுக, திமுக போன்ற திராவிடக்கட்சிகளின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

அரசியல் ஒரு ஆபத்தான விளையாட்டு!: ரஜினி ஓப்பன் டாக்

சரி… யார் இந்த ரஜினி…

1975ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, பஸ் கண்டக்டராக இருந்து வந்த ரஜினிகாந்த் என்கிற சிவாஜிராவ் கெய்க்வாட் தமிழ்சினிமாவில் தனது முதல் காலடியை எடுத்து வைத்தார். படப்பிடில் அவரதுரு முதல்காட்சியே “நான் பைரவி புருஷன் வந்திருக்கேன்” என்பது. அவரது அவசத்தலான நடிப்பு, தமிழ் சினிமா ரசிகர்களின் மனதையும் ஆட்கொண்டது.  தொடர்ந்து, அவர் காட்டிய ஸ்டைலும் கொட்டிய உழைப்பும் மிருக்கதனமானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக கோலோச்சிக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜிக்கு மத்தியில் களமிறங்கி, பல்வேறு வகையான கேரக்டர்களை தாங்கி, ஒரே வருடத்தில் 24 படங்களை முடித்து கொடுத்து தயாரிப்பாளர்கள் மத்தியில் சிகரமாக உயர்ந்தவர். ரஜினியின் தனித்தன்மை உணர்ந்த தயாரிப்பாளர் தாணுதான், தனது பைரவி பட விளம்பரத்தின்போது ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்தி வழங்கி அவரை பெருமைப்படுத்தினார்.

அவ்வப்போது அவரது குடும்பத்தினரின் தவறுகளால், அவர்மீது விமர்சனங்கள் எழுந்தது உண்டு. ஆனால், அதையும் லாவகமாக சரிசெய்து வரும் ரஜினி சினிமாவில் மட்டுமல்ல. தனிப்பட்ட வாழ்க்கையிலும் எந்த ஒளிவு மறைவும் இல்லாமல், எளிமையாகவும், ஆன்மிக பயணமாகவும், அவர் வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்து வருவது, மக்கள் அவரை நேசிப்பதற்கு முக்கிய காரணமாகவே  உள்ளது. அதன் காரணமாகவே அன்றுமுதல் இன்றுவரை அவருக்கு ரசிகர்கள் உருவாகிக்கொண்டே இருக்கிறார்கள். இதை மறுக்க முடியாது. அதன் எதிர்பார்ப்புதான், ரஜினியின் அரசியல் அறிவிப்பு.

‘துக்ளக்’ வைத்திருப்பவனே அறிவாளி! ரஜினிகாந்தின் ‘ஆன்மிக அரசியல்’ கண்டுபிடிப்பு

ரஜினியின் அரசியல் எப்போது தொடங்கியது..

1991-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போதுதான், ரஜினி முதன்முதலாக அரசியல் குறித்து பேசத்தொடங்கினார். 1991-ல் தமிழக முதல்வராக ஜெயலலிதா தமிழக முதல்வராகபதவி ஏற்ற காலத்தில் இருந்தே ரஜினிகாந்த் பெயர் அரசியல் களத்தில் தீவிரமாக அடிபட தொடங்கியது. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பகுதியில் ரஜினிகாந்த் வீடும் இருந்ததால் கடும் கெடுபிடிகளுக்கு உள்ளானார்; அண்ணாமலை பட போஸ்டர்கள் ஒட்டவிடாமல் தடுக்கப்பட்டன என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.

மணிரத்னம் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட நிலையில் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஆர்.எம். வீரப்பன் முன்னிலையிலேயே தமிழகத்தில் வெடிகுண்டு கலாசாரம் அதிகரித்துவிட்டதாக அதிமுக அரசை விமர்சித்தார் ரஜினிகாந்த். இதுதான் அவரது அரசியலுக்கு அச்சாரமாக விளங்கியது என்று கூறலாம்.

இதையடுத்து, ஜெயலலிதா அமைச்சரவையில் புயல் வீசியது, ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

தொடர்ந்து, 1996 சட்டசபைதேர்தலின்போது, அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஜிகே மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். இந்த கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து. இந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து பேசினார். அப்போது,  தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்றார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் திமுக தமாகா கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணை புரிந்தது. அதிமுக பெரும் தோல்வியை சந்தித்தது.

தொடர்ந்து, 1998 பாராளுமன்ற தேர்தலிலும் திமுக- தமாகா கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார் ரஜினிகாந்த். ஆனால், துரதிருஷ்டவசமாக அந்த தேர்தலில் ரஜினியின் வாய்ஸ் எடுபடவில்லை. இது விமர்சனத்துக்கு உள்ளானதால், ரஜினி, தனது அரசியல் கருத்துக்களுக்கு ஓய்வுகொடுத்துவிட்டு, அரசியலில் இருந்த  சற்றே ஒதுங்கிக்கொண்டார் என்பதுதான் உண்மை.

இந்த நிலையில், கடந்த 2002ம் ஆண்டு ரஜினி நடித்த பாபா பட விவகாரத்தில் பாமகவுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் போக்கு உருவானது.  அப்போது, பெங்களூருவில் கன்னட நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் ரஜினி பேசிய பேச்சுகள் தமிழகத்துக்கு எதிராக இருந்தது; இதனால் கடுமையான விமர்சனங்களுக்க உள்ளானார் ரஜினி.

தொடர்ந்து காவிரிநிதி நீர் பிரச்சினை பற்றி எரிந்தது. தமிழகஅரசுக்கு ஆதரவாக திரையுலகம் திரண்ட நிலையில், அதில் கலந்துகொள்ள மறுத்ததால் அவர் கர்நாடகாவுக்கு ஆதரவாகவே செயல்படுவதாக அவர்மீது முத்திரை குத்தப்பட்டது. ஆனால், திடீரென ரஜினி, காவிரி நதிநீர் பிரச்சனைக்காக ரஜினிகாந்த் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ1 கோடி தர தயார் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  (ஆனால், இதுவரை அவர் ரூ.1 கோடி கொடுக்கவில்லை என்பது வேறு விஷயம்)

கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது,  பாமகவுக்கு எதிராக ரசிகர்கள் வாக்களிக்க ரஜினி வாய்ஸ் கொடுத்தார். ஆனால், அதுவும் எடுபடவில்லை. அதேபோல் நதிகள் இணைப்பை முன்வைத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தார், அதுவும் மக்களிடையே எடுபடவில்லை. இதனால் மீண்டும் சற்றே அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கத் தொடங்கினார்.  அவரிடம் அரசியல் குறித்து செய்தியாளர்கள் தொடர்ந்த கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், அதற்கு நேரடியாக பதில் தெரிவிக்காமல் நழுவிய ரஜினி, கடந்த 2008ம் ஆண்டில், அரசியலில் நுழைவது குறித்து கருத்து தெரிவித்தார்.  அதற்கான நேரம் வரட்டும், வந்ததும் பார்த்து கொள்ளலாம் என கூறியிருந்தார்.  அந்த நேரம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் அவருக்கு வந்துள்ளது போலும்.

இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் வாய்ஸ் கொடுக்க மறுத்ததுடன், ரசிர்கள் அவர்கள் விரும்பிய கட்சிகளுக்கு வாக்களிக்கலாம் என்று கூறி, அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். ஆனால், அவ்வப்போது, திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் தனது ரசிகர் மன்றத்தினரை அழைத்து பேசி வந்தார். இதுவும் கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தி வந்தது.

ரஜினியின் அரசியல் குறித்து ‘துக்ளக் அட்டைப்படம்’ மூலம் அம்பலப்படுத்திய குருமூர்த்தி…

2017ல் கட்சி அறிவிப்பு

இதுபோன்ற ஒரு சூழலில்தான், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி மறைவுக்கு பிறகு ரஜினி காந்த் முதல்முறையாக கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி அரசியல் குறித்து மீண்டும் வாய் திறந்தார். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அன்று தனது ரசிகர்மன்றத்தினரிடையே கட்சி குறித்த அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டார். தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும்,  ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றங்களாக மாற்றுவதாகவும் அறிவித்து, அடுத்த சட்டமன்றதேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறினார். இதனால், அவரது ரசிகர்கள் பெரும் ஆவலோடு கட்சிப்பணியாற்ற காத்துக்கொண்டிருந்தனர். திராவிடக்கட்சிகளுக்கு மாற்றாக ரஜினியின் அரசியல் உற்றுநோக்கப்பட்டது.

ஆனால், அவர் தொடர்ந்து, அரசியல் குறித்த நடவடிக்கையில் இறங்காமல், படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவ்வப்போது அரசியல் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். குறிப்பாக என்ஐஏ போராட்டம் போன்றவற்றுக்கு, அவரது கருத்து பாஜகவுக்கு ஆதரவாகவே இருந்தது வந்தது.

ரஜினியின் சினிமா வாழ்க்கையை போற்றும் வகையில், கோவாவில் நடைபெற்று வரும் உலக திரைப்பட விழாவில்  மத்திய பாஜக அரசு அவருக்கு ‘கோல்டன் ஐகான்’ என்ற சாதனையாளர் சிறப்பு விருதை வழங்கி கவுரவித்தது. இதனால் ரஜினி பாஜக ஆதரவாளர் என்றுமீண்டும் முத்திரை குத்தப்பட்டது.

ஆனால், அவர் அதை தவிர்க்கும் நோக்கில், 2019ம்ஆண்டு நவம்பர் 21ந்தேதி அன்று சென்னை விமான நிலையத்தில் பேட்டி கொடுக்கும்போது, தனக்கு கிடைத்துள்ள  ‘கோல்டன் ஐகான்’ என்ற சிறப்பு விருதுக்கு தமிழக மக்கள் தான் காரணம் என்றும் அந்த விருதை தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று தெரிவித்ததோடு,

2021ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற  தேர்தலில் , தமிழக மக்கள் மிகப்பெரிய அற்புதத்தை, அதிசயத்தை 100க்கு 100 சதவீதம் நடத்திக் காட்டுவார்கள் என  கூறினார்.

அதுபோல, மற்றொரு செய்தியாளர் சந்திப்பின்போது, தன்மீது காவிச்சாயம் பூச சிலர் நினைக்கிறார்கள் என்று தெரிவித்ததுடன், பாஜக ஆபத்தான கட்சி என்று அவர் பேசியதும் நினைவிருக்கலாம். ஆனாலும், அரசியல் குறித்து, அவர் உறுதியான முடிவை தெரிவிக்காத நிலையில், அவர், அரசியலுக்கு சரிப்படமாட்டார் என்ற அரசியல் நோக்கர்களும், கட்சிகளும் நினைந்து வந்தன.

ஆனால், ஏற்கனவே தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பதாக கூறி, திராவிட கட்சிகளுக்கு வம்புக்கு இழுத்த ரஜினி,  இந்த ஆண்டு (2020) ஜனவரியில் நடைபெற்ற துக்ளக் பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியபோது, முரசொலி மற்றும் பெரியார் குறித்து பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். பின்னர் சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவர் தான் முஸ்லிம் மக்களின் ஆதரவாளர், அவர்களுக்கு எந்தவொரு பிரச்சினை என்றாலும், முதல் ஆளாக வருவேன் என்று கூறியதுடன்,

முஸ்லிம்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்தவர் டெல்லி வன்முறைக்கு கண்டனம் தெரிவித்தார்.  அத்துடன் இந்த விஷயத்தில் உளவுத்துறை தோல்வி அடைந்ததாக கூறி, அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று மறைமுகமாக கருத்து தெரிவித்தார். இதனால், ரஜினி விரைவில் அரசியல் களம் புகுவார் என எதிர்பார்ப்பு நிலவியது.

அரசியல் அறிவிப்பு

அதை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று ஆரூடம் கூறியவர்களின் எண்ணங்களையும் உடைத்து சுக்குநுறாக்கி உள்ளார் ரஜினி. அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றதுடன், 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெறுவோம் என் அறிவிப்பை உற்சாகத்துடன் நேற்று (டிசம்பர் 3ந்தேதி) அதிரடியாக  அறிவித்து உள்ளார்.

நேற்று (டிசம்பர் 3, 2020)  ரஜினி முதலில் வெளிட்ட டிவிட்டில், #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல என்று தெரிவித்திருப்பதுடன், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிபெற்று,  தமிழகத்தில் நேர்மையான,  நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதிமதச் சார்பற்ற, ஆன்மிக அரசியல் உருவாவது நிச்சயம்,  அற்புதம், அதிசயம் நிகழும் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரஜினியின் டிவிட் டிவிட்டர் சமுக வலைதளத்தில் டிரெண்டிங்கானது. அவரதரு ரசிகர்கள் உற்சாகத்தில் இனிப்பு வழங்கியும், வெடிவெடித்தும் தலைகால்புரியாமல் சந்தோச வெள்ளத்தில் மிதந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தமிழக மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்பது உள்பட பல்வேறு பஞ்ச் டயலாக்குகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினார். தற்போது கொரோனா காலம் என்பதால், தனக்கு நடத்தப்பட்டுள்ள சிறுநீரக் மாற்று அறுவைச் சிகிச்சையை காரணம் காட்டி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். தொடர்ந்து பாஜகவில் இருந்து வந்த  அர்ஜுனமூர்த்திக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுத்தும், தமிழருவி மணியன் கட்சியின் மேற்பார்வையாளராக இருப்பார் என்றும் அறிவித்தார்.

ரஜினியின் புதிய கட்சி, 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா அல்லது அரசியல் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுமா என்பது இனிவரும் காலங்களில் தெரிய வரும். இருந்தாலும், தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், ரஜினியின் திடீர் கட்சி அறிவிப்பு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, அரசியல் நோக்கர்களிடையேயும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

ரஜினி – ரஜினி என்னும் மனிதருக்குள்  குடியிருந்து வரும் காந்த சக்தியின் அற்புதத்தை யாரும் குறைத்து எடைபோட்டு விட முடியாது. அது திரையுலகில் மட்டுமின்றி, அவரது ரசிகர்களுக்கும் வேதவாக்கவே தெரிகிறது. இதை ஒவ்வொரு முறையும் நாம் கண்டுவருகிறோம்…

ஆனால், 2021ம் ஆண்டைய தமிழக சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் வாய்ஸ் தாக்கத்தை உருவாக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்…

அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம் ரசிகர்களுக்கு ரஜினி அழைப்பு (வீடியோ)