மாஸ்க்குடன் லம்போகினி காரில் வலம் வந்த ரஜினிகாந்த்..

Must read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்தாலும் அவ்வப் போது நாட்டு நடப்புகள் பற்றி கருத்து தெரிவித்து வருகிறார், கொரோனா விழிப்பு ணர்வுக்காக அமிதாப் பங்கேற்ற குறும் படத்தில் 2 மாதங்களுக்கு முன் நடித்தார். சமீபத்தில் தூத்துக்குடியில் தந்தை, மகனை போலீஸார் அடித்து கொன்றதற்கு எதிராக கடுமையான கண்டனம் தெரிவித்தார்.

நடிகர் எஸ்.ஜே,சூர்யா தனது பிறந்தநாளில் ரஜினினையை அவரது வீட்டில் சந்தித்து அமிதாப்புடன் தான் நடிக்கும் ’ உயர்ந்த மனிதன்’ படபோஸ்டரை ரீலீஸ் செய்ய கேட்டு அவரது வாழ்த்துக்களை பெற்றார்.
இந்நிலையில் ரஜினிகாந்த் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி சொகுசு கொரோனா லம்போகினி காரை அவரே ஓட்டி செல்வதுபோன்ற படம் நெட்டில் வெளியாகி வைரலாகி உள்ளது.
ரஜினிகாந்த் தற்போது ’அண்ணாத்த’ படத்தில் நடிக்கிறார். விஸ்வாசம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார். கொரோனா ஊரடங்கால் முடிந்த பிறகுஇதன் அடுத்த கட்ட படப் பிடிப்பு தொடங்க உள்ளது.

More articles

Latest article