நடிகர் ரஜினிகாந்த் நேற்று அவரது 70-வது பிறந்தநாளை கொண்டாடினார்.

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், ரஜினிகாந்த் அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த கேக்கில், ‘இப்ப இல்லன்னா.. எப்பவும் இல்ல.. என்பதைக் குறிக்கும் வகையில் Now or Never என்று எழுதப்பட்டிருந்த கேக்கை வெட்டி கொண்டாடினார். இந்தப் புகைப்படத்தை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை பலரும் ஷேர் செய்துவருகின்றனர்.