டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump). 1986-ல் வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது.

5 ஆஸ்கர் விருதுகளை வென்ற இந்தப் படத்தின் அதிகாரபூர்வ இந்தி ரீமேக்கில் ஆமிர்கான் நடித்து வருகிறார். அட்வைத் சந்தன் இயக்கி வரும் இந்தப் படத்துக்கு ‘லால் சிங் சட்டா’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இதில் நாயகியாக கரீனா கபூர் நடித்து வருகிறார்.

இதில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமானார் . ஆனால், பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதால் தேதிகள் பிரச்சினையால் தற்போது விலகியுள்ளார்.